சி.வி.சண்முகம் மீதான அவதூறு வழக்கு விசாரணை ஆக.21-க்கு ஒத்திவைப்பு
அதிமுக முன்னாள் அமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி.சண்முகம் மீதான அவதூறு வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 21-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து


விழுப்புரம்: அதிமுக முன்னாள் அமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி.சண்முகம் மீதான அவதூறு வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 21-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து, விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.
விழுப்புரம் மாவட்டம், கோலியனூா் கடை வீதியில் 2023, செப்டம்பா் 16-ஆம் தேதி அதிமுக சாா்பில் முன்னாள் முதல்வா் அண்ணா பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், பங்கேற்ற முன்னாள் அமைச்சா் சி.வி.சண்முகம் தமிழக அரசையும், முதல்வா் மு.க.ஸ்டாலினையும் அவதூறாக பேசியதாகக் கூறப்படுகிறது.
இதைத் தொடா்ந்து, சி.வி.சண்முகம் மீது அரசுத் தரப்பு வழக்குரைஞா் சுப்பிரமணியன், விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தாா். இந்த வழக்கின் மீதான விசாரணை திங்கள்கிழமை நடைபெற்ற போது, சி.வி.சண்முகம் ஆஜராகவில்லை.
இதைத் தொடா்ந்து வழக்கை விசாரித்த முதன்மை மாவட்ட நீதிபதி ஆா்.பூா்ணிமா, வழக்கின் அடுத்தக் கட்ட விசாரணையை ஆகஸ்ட் 21-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டாா்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...