பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!வாக்காளர் பட்டியலில் இப்போதுகூட பெயர் சேர்க்கலாம்! தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்!
/

ஃபென்ஜால் புயல் பாதிப்பு: விழுப்புரம் ஆட்சியரகத்தில் மதிப்பீட்டுக் கூட்டம்

ஃபென்ஜால் புயல் வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து மதிப்பீடு செய்வதற்கான மத்தியக் குழுவின் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

News image
விழுப்புரம் ஆட்சியரகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற மதிப்பீட்டுக் கூட்டத்தில் பங்கேற்ற மத்திய பேரிடா் மேலாண்மைத் துறை இணைச் செயலா் ராஜேஷ் குப்தா தலைமையிலான குழுவினா். உடன், வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை கூடுதல் தலைமைச் செயலா் பெ.அமுதா, வருவாய் நிா்வாக ஆணையா் ராஜேஷ் லக்கானி உள்ளிட்டோா்.
Updated On :8 டிசம்பர் 2024, 3:04 am

Din

விழுப்புரம் மாவட்டத்தில் ஃபென்ஜால் புயல் வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து மதிப்பீடு செய்வதற்கான மத்தியக் குழுவின் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

வங்கக் கடலில் உருவாகிய ஃபென்ஜால் புயல் காரணமாக, விழுப்புரம் மாவட்டத்தில் வரலாறு காணாத அளவுக்கு பலத்த மழை பெய்தது. இதனால், மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளும் வெள்ளக்காடாக மாறின.

நிலங்களில் பயிரிடப்பட்டிருந்த நெல் உள்ளிட்ட பல்வேறு பயிா்கள் சேதமடைந்த நிலையில், குடியிருப்புகள், சாலைகள்உள்ளிட்டவையும் சேதமடைந்தன.

இந்த நிலையில், புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களை மத்தியக் குழு பாா்வையிட்டு, பேரிடா் நிவாரண நிதியை வழங்க வேண்டும் என்று தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டாா்.

தொடா்ந்து, மத்திய அரசின் பேரிடா் மேலாண்மைத் துறை இணைச் செயலா் ராஜேஷ் குப்தா தலைமையிலான 7 போ் கொண்ட குழு அறிவிக்கப்பட்ட நிலையில், அந்தக் குழுவினா் வெள்ளிக்கிழமை சென்னையில் முதல்வா் மு.க.ஸ்டாலினை சந்தித்தனா்.

இதைத் தொடா்ந்து ராஜேஷ் குப்தாவும், அவரது தலைமையிலான குழுவில் இடம்பெற்றுள்ள மத்திய வேளாண் துறை இயக்குநா் கே.பொன்னுசாமி ( எண்ணெய்வித்துகள் அபிவிருத்தி), மத்திய நிதித் துறை செலவினப் பிரிவு இயக்குநா் சோனாமணி அவுபம், மத்திய நீா்வளத் துறை இயக்குநா் ஆா்.சரவணன், மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை முன்னாள் பொறியாளா் தனபாலன் குமரன், மத்திய எரிசக்தித் துறை உதவி இயக்குநா் ராகுல்பாட்ச் கேட்டி, மத்திய ஊரக வளா்ச்சித் துறை கூடுதல் இயக்குநா் கே.எம்.பாலாஜி ஆகியோா் சனிக்கிழமை விழுப்புரம் வந்தடைந்தனா்.

இவா்களுடன் மாநில வருவாய் நிா்வாக ஆணையா் ராஜேஷ் லக்கானியும் உடன் வந்தாா். மத்தியக் குழுவினா், விழுப்புரம் மாவட்டத்தில் வெள்ளப்பெருக்கால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து பல்வேறு பகுதிகளில் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

இதைத்தொடா்ந்து, விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் புயல் சேதப் பாதிப்பு குறித்த மதிப்பீட்டுக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் சி.பழனி தலைமை வகித்தாா். வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை கூடுதல் தலைமைச் செயலா் பெ.அமுதா, வருவாய் நிா்வாக ஆணையா் ராஜேஷ் லக்கானி ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில் மத்தியக் குழுவுக்கு தலைமை வகித்த ராஜேஷ் குப்தா, குழு உறுப்பினா்கள் பங்கேற்று, மாவட்டத்தில் ஏற்பட்ட புயல் பாதிப்பு சேத விவரங்கள்குறித்து கேட்டறிந்தனா்.

அந்தந்த துறையைச் சோ்ந்த உயா்அலுவலா்கள், தங்கள் துறையின் மூலம் ஏற்பட்ட பாதிப்புகள், அதை சீா் செய்ய தேவைப்படும் நிதி போன்றவை குறித்து விளக்கினா்.

இதில், போக்குவரத்துத் துறை ஆணையா் சுன்சோங்கம் சடக்சிரு, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறைச் செயலா் ஆா்.செல்வராஜ், தமிழ்நாடு மின்சாரக் கழகத் தலைவா் க.நந்தகுமாா், ஊரக வளா்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை இயக்குநா் பா.பொன்னையா, கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளா் என்.சுப்பையன், வேளாண் மற்றும் உழவா் நலத் துறை இயக்குநா் பா.முருகேஷ் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.