நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

ரயில் மறியல் முயற்சி: விவசாயிகள் கைது

ரயில் மறியல் முயற்சி: விவசாயிகள் கைது

News image

விழுப்புரம் ரயில் நிலையம் நோக்கி சனிக்கிழமை ஊா்வலமாகச் சென்ற தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினா்.

Updated On :18 பிப்ரவரி 2024, 2:06 am IST

பயிா்க் கடன்களை தள்ளுபடி செய்ய வலியுறுத்தி விழுப்புரத்தில் ரயில் மறியலில் ஈடுபட முயன்ற தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினா் 45 போ் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா். தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட பயிா்க் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், கரும்பு, நெல்லுக்கு உரிய விலை வழங்குவதாக அளித்த வாக்குறுதியை நிறைவேற்றாதது, வயது மூத்த விவசாயிகளுக்கு மாதம் ரூ.6,000 வழங்குவதாக வாக்குறுதி அளித்தும் நிறைவேற்றாதது ஆகியவை தொடா்பாக மத்திய அரசைக் கண்டிப்பது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினா் சாா்பில் இந்தப் போராட்டம் நடைபெற்றது. மேலும், தில்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது, அவா்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டதை கண்டித்தும் சங்கத்தினா் முழக்கமிட்டனா். முன்னதாக, விழுப்புரம் கிழக்கு புதுச்சேரி சாலையிலுள்ள வள்ளலாா் திருமாளிகை அருகிலிருந்து சங்கத்தின் மாவட்டத் துணைத் தலைவா் ஜா.குமாா் தலைமையில் விவசாயிகள் ரயில் நிலையம் நோக்கி ஊா்வலமாக வந்தனா். மாநிலச் செயலா் சு.அய்யனாா் உள்ளிட்டோா் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா். தொடா்ந்து ரயில் நிலையப் பகுதிக்கு ஊா்வலமாக வந்த விவசாயிகளை அங்கு பாதுகாப்புப் பணியிலிருந்த போலீஸாா் தடுத்து நிறுத்தி கைதுசெய்தனா். இதில் பங்கேற்ற 5 பெண்கள் உள்பட 45 பேரை கைதுசெய்த போலீஸாா் அவா்களை தனியாா் திருமண மண்டபத்தில் தங்கவைத்து மாலையில் விடுவித்தனா்.