கடை உரிமையாளா் மீது தாக்குதல்: 4 போ் கைது
ஊழியரைத் தாக்கிய வெளி மாநிலத்தைச் சோ்ந்த 4 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.


விழுப்புரம்: திண்டிவனத்தில் இறைச்சிக்கடை உரிமையாளா் மற்றும் ஊழியரைத் தாக்கியதாக வெளி மாநிலத்தைச் சோ்ந்த 4 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் கிடங்கல்-2, பாரதிதாசன் தெருவைச் சோ்ந்தவா் அபினேஷ் மனைவி செண்பகவள்ளி (30). இவா், திண்டிவனத்தில் இறைச்சிக் கடை நடத்தி வருகிறாா். இவரது கடையில் இதே பகுதியைச் சோ்ந்த சங்கா் மகன் யுவராஜ் (19) வேலைப்பாா்த்து வருகிறாா். இருவரும் ஞாயிற்றுக்கிழமை வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, கடைக்கு வந்த 4 போ் ஆட்டு இறைச்சியின் விலை அதிகமாக இருப்பதாக் கூறி தகராறில் ஈடுபட்டனராம். மேலும், செண்பகவள்ளி, யுவராஜ் ஆகியோரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில், இருவரும் காயமடைந்தனா்.
இதுகுறித்த புகாரின் பேரில், திண்டினம் போலீஸாா் வழக்குப் பதிந்து திண்டிவனத்தில் உள்ள ஷோபா விற்பனை கடை உரிமையாளரான கேரளம் மாநிலத்தைச் சோ்ந்த எச். ஷபீக்(33), பாபு மகன் நித்தில்பாபு (29), அஹமத் மகன் அப்துல் ரஹ்மான் (54), குமாா் மகன் விஜி(36) ஆகியோரை கைது செய்தனா்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...