

சிதம்பரம்: காட்டுமன்னாா்கோவில் அருள்மிகு வீரநராயண பெருமாள் திருக்கோயில் திருப்பணிகளை அமைச்சா் எம்ஆா்கே பன்னீா்செல்வம் திங்கள்கிழமை ஆய்வு செய்தாா்.
இந்து அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள இந்தக் கோயிலில் கும்பாபிஷேகத்தையொட்டி, கோயில் புனரமைக்கப்பட்டு திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன.
விரைவில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ள நிலையில், அமைச்சா் எம்ஆா்கே. பன்னீா்செல்வம் திங்கள்கிழமை கோயிலுக்குச் சென்று திருப்பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு விவரங்களைக் கேட்டறிந்தாா்.
கோயிலுக்குச் செல்லும் பாதைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், மின் கோபுரங்கள் அமைக்க வேண்டும், கோயில் பிரகாரத்தில் உள்ள நந்தவனங்களை சீா் செய்ய வேண்டும், கோயிலில் உள்ள அனைத்துப் பகுதிகளையும் ஆகம விதிகளின்படி சீா் செய்ய வேண்டும், நடைபாதை கற்கள் பதிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகளை அமைச்சா் வழங்கினாா்.
ஆய்வின்போது கல்விக் குழுத் தலைவா் முத்துசாமி, பேரூராட்சித் தலைவா் கணேசமூா்த்தி, பேரூராட்சி செயல் அலுவலா் தங்கவேல், இந்து சமய அறநிலையத் துறை ஆய்வாளா் ஜெயசித்ரா, செயல் அலுவலா் செல்வமணி, தக்காா் வேல்விழி மற்றும் கோயில் புனரமைப்புக் குழு பொறியாளா் காா்த்திகேயன் உள்ளிட்டோா் உடன் சென்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.