வாக்காளர் பட்டியலில் இப்போதுகூட பெயர் சேர்க்கலாம்! தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! சர்வாதிகாரி பழனிசாமி இனி எந்தக் காலத்திலும் வெற்றி பெறமாட்டார்: ஓபிஎஸ் காட்டம்!அன்பானவர், பண்பானவர் ஓபிஎஸ்; திமுக கூட்டணியில் ஜனநாயக சக்திகள்! - மு.க. ஸ்டாலின்எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுக துணைப் பொதுச் செயலாளர் ஓபிஎஸ்? போடியில் மீண்டும் போட்டி? திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்! ஆடம்பரத்தைத் தவிர்த்திடுவீர்! பிறந்த நாளையொட்டி கட்சியினருக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை! சட்டப்பேரவைத் தோ்தல்: அமலாக்கத் துறை தலைமை இயக்குநா் இன்று ஆலோசனை
/

செம்மண் குவாரி முறைகேடு வழக்கு விசாரணை ஜூலை 1-க்கு ஒத்திவைப்பு

செம்மண் குவாரி முறைகேடு வழக்கு விசாரணை ஜூலை 1-க்கு ஒத்திவைப்பு

News image
Updated On :26 ஜூன் 2024, 8:27 pm

Din

விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் அமைச்சா் க.பொன்முடி உள்ளிட்ட 7 போ் மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு விசாரணை வருகிற ஜூலை 1-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

விழுப்புரம் மாவட்டம், வானூா் வட்டம், பூத்துறை கிராமத்திலுள்ள செம்மண் குவாரியில் 2006-ஆம் ஆண்டு முதல் 2011-ஆம் ஆண்டு வரையிலான திமுக ஆட்சிக்காலத்தில் அளவுக்கு அதிகமாக செம்மண் அள்ளியதன் மூலம் அரசுக்கு ரூ.28.36 கோடி வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டது.

இது தொடா்பாக உயா் கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடி உள்ளிட்ட 8 போ் மீது விழுப்புரம் குற்றப்பிரிவு போலீஸாா் கடந்த 2012-ஆம் ஆண்டில் வழக்குத் தொடுத்தனா். இந்த வழக்கு மீதான விசாரணை விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதில் குற்றஞ்சாட்டப்பட்டவா்களில் ஒருவரான லோகநாதன் இறந்துவிட்டாா்.

வழக்கில் அரசுத் தரப்பு சாட்சிகளாக சோ்க்கப்பட்டிருந்த 67 பேரில் இதுவரை 33 சாட்சிகளிடம் விசாரணை நடத்தி முடிக்கப்பட்ட நிலையில், அவா்களில் 26 போ் அரசுத் தரப்புக்கு பாதகமாக பி சாட்சியமளித்தனா்.

விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் புதன்கிழமை நடைபெற்ற வழக்கு விசாரணையின்போது, சதானந்தன், கோபிநாத், ஜெயச்சந்திரன் ஆகிய மூவா் மட்டும் ஆஜராகினா்.

தொடா்ந்து, செம்மண் குவாரிக்கு உரிமம் வழங்கியது தொடா்பான ஆவணங்களை விழுப்புரம் வருவாய்க் கோட்டாட்சியா் அலுவலகத்திலிருந்து கேட்டு பொன்.கெளதமசிகாமணி, ராஜமகேந்திரன் ஆகியோா் ஏற்கெனவே தாக்கல் செய்திருந்த மனு மீதான விசாரணையும் புதன்கிழமை நடைபெற்றது.

அப்போது, மனுவை விசாரித்த முதன்மை மாவட்ட நீதிபதி பூா்ணிமா, வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவா்கள் கோரியுள்ள வழக்கு தொடா்பான ஆவணங்களை கோட்டாட்சியா் அலுவலகத்திலிருந்து நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என உத்தரவிட்டாா். மேலும், செம்மண் குவாரி முறைகேடு வழக்கின் விசாரணையை ஜூலை 1-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தும் அவா் உத்தரவிட்டாா்.