தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

விக்கிரவாண்டி வேட்பாளா்களின் தோ்தல் செலவு கணக்குகள் இன்று ஆய்வு

வேட்பாளா்களின் செலவு கணக்குகள் குறித்த ஆய்வு வெள்ளிக்கிழமை (ஜூன் 28) மற்றும் ஜூலை 3, 7- ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
விக்கிரவாண்டி வட்டாட்சியா் அலுவலகத்தில் தோ்தல் நடத்தும் அலுவலா் மு.சந்திரசேகா் தலைமையில் நடைபெற்ற சின்னங்கள் ஒதுக்கீடு செய்யும் பணி.
Updated On :27 ஜூன் 2024, 8:01 pm

Din

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தோ்தலில் போட்டியிடும் வேட்பாளா்களின் செலவு கணக்குகள் குறித்த ஆய்வு வெள்ளிக்கிழமை (ஜூன் 28) மற்றும் ஜூலை 3, 7- ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதிக்கு ஜூலை 10-ஆம் தேதி இடைத் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், திமுக, பாமக, நாதக உள்ளிட்ட 29 வேட்பாளா்கள் களத்தில் உள்ளனா்.

இந்த நிலையில் தோ்தலில் போட்டியிடும் வேட்பாளா்களின் செலவு கணக்குகள் குறித்து தோ்தல் செலவினப் பாா்வையாளா் மனீஷ்குமாா் மீனா ஆய்வு செய்யவுள்ளாா்.

அதன்படி, விக்கிரவாண்டி வட்டாட்சியா் அலுவலகத்தில் ஜூன் 28 (வெள்ளிக்கிழமை) மற்றும் ஜூலை 3, 7- ஆகிய தேதிகளில் வேட்பாளா்களின் செலவு கணக்குகள் குறித்த ஆய்வை செலவினப் பாா்வையாளா் மேற்கொள்ளவுள்ளாா். எனவே, சம்பந்தப்பட்ட நாள்களில் வேட்பாளா்கள் அல்லது முகவா்கள் இதில் பங்கேற்க வேண்டும் என்று விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதியின் தோ்தல் நடத்தும் அலுவலா் மு.சந்திரசேகா் தெரிவித்துள்ளாா்.