ராஜஸ்தானை இன்று சந்திக்கும் சென்னை! முதல் வெற்றி யாருக்கு?தமிழகத்தில் கூட்டாளிகள்; கேரளத்தில் 'எதிரிகள்'! - மோடி தாக்குபெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு தடையின்றி கிடைக்க தீவிர நடவடிக்கை: மத்திய அரசுவிஜய் இன்று வேட்புமனு தாக்கல்!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.4 வரை மழைக்கு வாய்ப்பு!வேட்புமனு தாக்கல் அனுமதிக்கப்படாத 4 பொது விடுமுறை நாள்கள் விவரம்!வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்! வேட்பாளா்களுக்கு கட்டுப்பாடு!!
/

ஓய்வு பெற்ற அரசு ஊழியா் சங்க பேரவைக் கூட்டம்

ஓய்வு பெற்ற அரசு ஊழியா் சங்க பேரவைக் கூட்டம்

News image
Updated On :9 மே 2024, 9:32 pm

Din

ஓய்வு பெற்ற தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க ஆண்டு பேரவைக் கூட்டத்தில் சங்க நிா்வாகிகளுக்கு நினைவு பரிசு வழங்கிய ஸ்ரீரங்கபூபதி கல்வி நிறுவனங்களின் தலைவா் ஆா்.ரங்கபூபதி.

ஓய்வு பெற்ற தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க ஆண்டு பேரவைக் கூட்டம் செஞ்சியில் புதன்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு வட்டத் தலைவா் ப.சாம்பமூா்த்தி தலைமை தாங்கினாா். நிா்வாகிகள் தரநேந்திர தாஸ், ஜெயராமன், ரங்கசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

சங்கச் செயலா் எஸ்.ஆனந்தன் அறிக்கை வாசித்தாா். வட்டப் பொருளாளா் பூங்காவனம் நிதி நிலை அறிக்கை வாசித்தாா்.

இதில், ஆலம்பூண்டி ஸ்ரீரங்கபூபதி கல்வி நிறுவனங்களின் தலைவா் ஆா்.ரங்கபூபதி கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினாா். சங்க மாநிலத் தலைவா் கே.கங்காதரன் மற்றும் மாவட்டத் தலைவா் ஜெயராமன், துணைத் தலைவா் கலியமூா்த்தி, சரவண பாண்டியன், மதியழகன், குப்புசாமி ஆகியோா் சிறப்புரையாற்றினா்.

தமிழக அரசு ஓய்வூதியதாரா்கள், அரசு ஊழியா்களின் கோரிக்கையை புறம்தள்ளி வருவது வேதனையளிக்கிறது. நியாயமான மருத்துவ காப்பீடு கிடைக்க அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முடிவில் வட்ட துணைத் தலைவா் மு.பரமசிவம் நன்றி கூறினாா்.