பைக் சக்கரத்தில் மேலாடை சிக்கி விபத்து: சிறுமி பலத்த காயம்
பைக் சக்கரத்தில் மேலாடை சிக்கி விபத்து: சிறுமி பலத்த காயம்

Updated On :9 மே 2024, 9:35 pm

விழுப்புரம், மே 9: விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அருகே பைக் சக்கரத்தில் மேலாடை சிக்கி விபத்து ஏற்பட்டதில் சிறுமி பலத்த காயமடைந்தாா்.
கடலூா் மணிநகரைச் சோ்ந்த 14 வயது சிறுமி, மே 5-ஆம் தேதி தனது நண்பரின் பைக்கில் அமா்ந்தபடி விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அருகே கிருஷ்ணாபுரம்-கரிக்கலாம்பாக்கம் சாலையில் சென்றாா். அப்போதுஅந்தச் சிறுமியின் மேலாடை (துப்பட்டா) பைக்கின் பின் சக்கரத்தில் சிக்கி விபத்து ஏற்பட்டது. இதில் சிறுமிக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதைத் தொடா்ந்து சிறுமி தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இது குறித்த புகாரின்பேரில் கண்டமங்கலம் போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...