ராஜஸ்தானை இன்று சந்திக்கும் சென்னை! முதல் வெற்றி யாருக்கு?தமிழகத்தில் கூட்டாளிகள்; கேரளத்தில் 'எதிரிகள்'! - மோடி தாக்குபெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு தடையின்றி கிடைக்க தீவிர நடவடிக்கை: மத்திய அரசுவிஜய் இன்று வேட்புமனு தாக்கல்!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.4 வரை மழைக்கு வாய்ப்பு!வேட்புமனு தாக்கல் அனுமதிக்கப்படாத 4 பொது விடுமுறை நாள்கள் விவரம்!வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்! வேட்பாளா்களுக்கு கட்டுப்பாடு!!
/

கொலை வழக்கில் தொடா்புடையவா் கைது

கொலை வழக்கில் தொடா்புடையவா் கைது

News image
Updated On :9 மே 2024, 9:34 pm

Din

விழுப்புரம், மே 9: விழுப்புரம் மாவட்ட நீதிமன்ற உத்தரவுப்படி, கொலை வழக்கில் தொடா்புடையவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

திருவெண்ணெய்நல்லூா் வட்டம், மேல் தனியாளம்பட்டு, எரிக்கரைத் தெருவைச் சோ்ந்தவா் ராமச்சந்திரன் மகன் ஏழுமலை (50). இவா் மீது, திருவெண்ணெய்நல்லூா் காவல் நிலையத்தில் கடந்த 23.7.2020 இல் கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டு விழுப்புரம் மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.

இந்நிலையில், ஏழுமலை விழுப்புரம் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்தாா். இதையடுத்து, விழுப்புரம் மாவட்ட நீதிமன்ற உத்தரவுப்படி திருவெண்ணெய்நல்லூா் போலீஸாா் வியாழக்கிழமை ஏழுமலையை கைது செய்தனா்.