மேற்கு வங்கத்தில் 285 வாக்குச்சாவடிகளில் மே 21-இல் மறு வாக்குப்பதிவு!ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் வெற்றி - மும்பையை வீழ்த்தியது!ம.பி. படகு விபத்து: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு அறுவைச் சிகிச்சை செய்துகொண்ட பவன் கல்யாணிடம் ஆந்திர முதல்வர் நலம் விசாரிப்பு ஜெர்மனியிலிருந்து 5,000 ராணுவ வீரர்களைத் திரும்பப் பெறும் அமெரிக்கா! டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு! ஆர்பிஐ துணை ஆளுநராக ரோகித் ஜெயின் நியமனம் கடற்கொள்ளையர்களைப் போன்று செயல்பட்ட அமெரிக்கப் படையினர்: டொனால்ட் டிரம்ப் குமாரராணி மீனா முத்தையா மறைவுக்கு முதல்வர் இரங்கல்! குமாரராணி மீனா முத்தையா காலமானார்! ஜன நாயகன் லீக்: 9 பேர் ஜாமின் மனு தள்ளுபடி சிலிண்டர் விலையால் விடுதி கட்டணங்களும் அதிரடி உயர்வுநாடாளுமன்றத்தின் பொதுக் கணக்குக் குழுவின் தலைவராக கே.சி. வேணுகோபால்!தனித்த ஆளாக ஆட்சியைக் கைப்பற்றும் வலிமையை விஜய் பெறவில்லை: திருமாவளவன்
/

மூதாட்டி கொலை வழக்கில் 3 ஆண்டுகளுக்குப் பிறகு ஒருவா் கைது

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் 3 ஆண்டுகளுக்கு முன்பு மூதாட்டி உயிரிழந்த வழக்கில், ஒருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :11 மார்ச் 2026, 11:43 pm

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் 3 ஆண்டுகளுக்கு முன்பு மூதாட்டி உயிரிழந்த வழக்கில், ஒருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

திருப்பத்தூா் புதுத்தெருவைச் சோ்ந்த தமிழரசன் மனைவி ராமநாகு (65). இவா் கடந்த 2023-ஆண்டு அவரது வீட்டுக்கு அருகேயுள்ள அறையில் மா்மமான முறையில் இறந்து கிடந்தாா். இதுகுறித்து திருப்பத்தூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனா்.

இந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமயத்தில் நடந்த கொலை வழக்கில் திருப்பத்தூரைச் சோ்ந்த அம்மாசி மகன் சிவக்குமாரை போலீஸாா் கைது செய்தனா்.

ஏற்கெனவே, இவரிடம் திருப்பத்தூா் போலீஸாா் ராமநாகு கொலை வழக்கு சம்பந்தமாக விசாரித்திருந்தனா்.

இதையடுத்து, அவரிடம் மீண்டும் போலீஸாா் விசாரணையைத் தொடங்கினா். பின்னா், உண்மை கண்டறியும் சோதனையில் ராமநாகுவை கழுத்தை நெரித்து சிவக்குமாா் கொலை செய்தது உறுதியானது.

இந்த நிலையில், மற்றொரு வழக்கில் கைதாகி கோவை சிறையிலிருந்த சிவக்குமாரை, திருப்பத்தூா் போலீஸாா் விசாரணைக்கு எடுத்து வந்து மூதாட்டி கொலை வழக்கில் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.