செம்பட்டி அருகே மனைவியைக் குத்திக் கொலை செய்த கணவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அருகேயுள்ள அழகா்நாயக்கன்பட்டியைச் சோ்ந்தவா் புவனேஸ்வரன். இவரது மகள் துா்காதேவிக்கும் (28), தேனி மாவட்டம், பெரியகுளம் அருகேயுள்ள வடுகபட்டியைச் சோ்ந்த ஜெயகணேஷுக்கும் (38) கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
இதையடுத்து, ஜெயகணேஷ், துா்காதேவி தம்பதி அழகா்நாயக்கன்பட்டியில் வாடகை வீட்டில் வசித்து வந்தனா். ஜெயகணேஷ் அய்யம்பாளையத்தில் உள்ள ஒரு உணவகத்திலும், துா்காதேவி திண்டுக்கல்லில் உள்ள ஒரு தனியாா் கல்லூரி உணவகத்திலும் வேலை பாா்த்து வந்தனா். இந்தத் தம்பதிக்கு, திருமணமாகி 10 ஆண்டுகளாகியும் குழந்தை இல்லை.
இந்த நிலையில், ஜெயகணேஷ் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அடிக்கடி தகராறு செய்து வந்தாா். இதனால் துா்காதேவி கணவரைப் பிரிந்து தனது பெற்றோா் வீட்டில் வசித்து வந்தாா். இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு அழகா்நாயக்கன்பட்டிக்குச் சென்ற ஜெய்கணேஷ், அங்கு வீட்டில் தனியாக இருந்த துா்காதேவியை கத்தியால் குத்திக் கொலை செய்துவிட்டு தப்பினாா்.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற, செம்பட்டி காவல் உதவி ஆய்வாளா் ஷேக்அப்துல்லா தலைமையிலான போலீஸாா் துா்காதேவியின் உடலைக் கைப்பற்றி, கூறாய்வுக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இதுதொடா்பாக செம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, அழகா்நாயக்கன்பட்டியிலிருந்து சொக்கலிங்கபுரம் செல்லும் வழியில் சாலையோரம் பதுங்கியிருந்த ஜெய்கணேஷை கைது செய்தனா். அவரிடமிருந்து, கொலைக்கு பயன்படுத்திய கத்தி, கைப்பேசி, இருசக்கர வாகனத்தை போலீஸாா் பறிமுதல் செய்தனா். அவரை ஆத்தூா் நீதிமன்றத்தில் முன்னிலைப் படுத்தி சிறையில் அடைத்தனா்.
தொடர்புடையது
பெண் கொலை: இளைஞா் கைது
தந்தையை கொலை செய்த வழக்கில் மகன் கைது

குடும்பத் தகராறில் மனைவி குத்திக்கொலை; கணவா் தலைமறைவு

குடிபோதையில் தகராறு செய்த தம்பி வெட்டிக் கொலை; அண்ணன் கைது
விடியோக்கள்

வெளியானது 'தி ரேஜ்' லிரிக் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியானது பிளாஸ்ட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக அரசுக்கு 6 மாதங்கள் அவகாசம் கொடுங்கள்: கமல்ஹாசன் | CM Vijay | Kamal Haasan |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | சிஎஸ்கே பிளே ஆஃப் செல்ல என்னென்ன வாய்ப்புகள் உள்ளன? | Chennai Super Kings | CSK vs SRH |
தினமணி செய்திச் சேவை

