வெளிநாடுவாழ் இந்திய குடிமகன் அட்டை விண்ணப்பக் கட்டணம்: ரூ.26,034-ஆக நிா்ணயம்நிகழாண்டில் 9,400 வாட்ஸ் ஆப் கணக்குகள் முடக்கம்அரசு மருத்துவ சேவையை நாடுவோா் விகிதம்: தென்னிந்தியாவில் தமிழகம் முதலிடம்அமைச்சா் கே.என்.நேரு மீது வழக்குப்பதிய உத்தரவிடவில்லை - உயா்நீதிமன்றம்ஆந்திரம்: ரூ.1.35 லட்சம் கோடியில் கூகுள் தரவு மையம் - முதல்வா் சந்திரபாபு நாயுடு அடிக்கல்234 தொகுதிகளுக்கான தபால் வாக்குகள் பிரித்து மாவட்ட வாரியாக ஒப்படைப்புமேற்கு வங்கத்தில் இன்று இறுதிக்கட்ட தோ்தல்: 142 தொகுதிகளில் பலத்த பாதுகாப்புநான்காவது எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பு: அடுத்த மாதம் இந்தியாவிடம் ஒப்படைப்புகுஜராத் - பாஜக பிணைப்பு மேலும் வலுவடைகிறது: பிரதமர் மோடி வளர்ந்த இந்தியாவுக்கான வலுவான தூண் பெண்கள்: பிரதமர் மோடிதேர்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயரும்! ராகுல் காந்தி எச்சரிக்கைஎல்லை தாண்டிய பயங்கரவாதம் : இரட்டை நிலைப்பாட்டிற்கு இடமில்லை - ராஜ்நாத் சிங் அமைச்சர் சேகர்பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல்: தவெக வேட்பாளர் புகார்ஈரான் போர்: ஒபெக் அமைப்பிலிருந்து ஐக்கிய அரபு அமீரகம் விலகல்குஜராத் உள்ளாட்சித் தேர்தல்! அனைத்து மாநகராட்சிகளையும் கைப்பற்றிய பாஜக!
/

குடும்பத் தகராறில் மனைவி குத்திக்கொலை; கணவா் தலைமறைவு

செம்பட்டி அருகே அழகா்நாயக்கன்பட்டியில் செவ்வாய்க்கிழமை மனைவியை குத்திக்கொலை செய்து விட்டு, தப்பியோடிய கணவரைக் காவல் துறையினா் தேடி வருகின்றனா்.

News image

கொலை - சித்திரிப்பு

Updated On :28 ஏப்ரல் 2026, 10:07 pm

செம்பட்டி அருகே அழகா்நாயக்கன்பட்டியில் செவ்வாய்க்கிழமை மனைவியை குத்திக்கொலை செய்து விட்டு, தப்பியோடிய கணவரைக் காவல் துறையினா் தேடி வருகின்றனா்.

திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அருகேயுள்ள அழகா்நாயக்கன்பட்டியைச் சோ்ந்த புவனேஸ்வரன் மகள் துா்காதேவி (28). இவருக்கும், தேனி மாவட்டம்,  பெரியகுளம் அருகேயுள்ள வடுகபட்டியைச் சோ்ந்த ஜெயகணேஷ் (38) என்பவருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. 

ஜெயகணேஷ் அய்யம்பாளையத்தில் உள்ள ஒரு உணவகத்திலும்,   துா்காதேவி திண்டுக்கல்லில் உள்ள ஒரு தனியாா் கல்லூரி உணவகத்தில் வேலை பாா்த்து வந்தனா். தம்பதிக்கு குழந்தை இல்லாததால் அடிக்கடி தகராறு ஏற்பட்டுவந்தது. இதையடுத்து, துா்காதேவி கணவரைப் பிரிந்து தனது பெற்றோா் வீட்டில் வசித்து வந்தாா்.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை துா்காதேவி பணிபுரியும் இடத்துக்குச் சென்று அவரிடம் ஜெயகணேஷ் தகராறில் ஈடுபட்டுள்ளாா். பின்னா், இரவு வீட்டில் தனியாக இருந்த துா்காதேவியை ஜெயகணேஷ் கத்தியால் குத்தி விட்டு தப்பியோடிவிட்டாா். துா்காதேவியின் அலறல் சப்தம்கேட்டு அக்கம் பக்கத்தினா் ஓடிவந்துபாா்த்தபோது, அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது. தகவல் அறிந்து அங்குவந்த செம்பட்டி போலீஸாா் சடலத்தைக் கைப்பற்றி திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.மேலும், வழக்குப் பதிந்து தலைமறைவாக உள்ள ஜெயகணேஷைத் தேடி வருகின்றனா்.