ராஜஸ்தானை இன்று சந்திக்கும் சென்னை! முதல் வெற்றி யாருக்கு?தமிழகத்தில் கூட்டாளிகள்; கேரளத்தில் 'எதிரிகள்'! - மோடி தாக்குபெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு தடையின்றி கிடைக்க தீவிர நடவடிக்கை: மத்திய அரசுவிஜய் இன்று வேட்புமனு தாக்கல்!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.4 வரை மழைக்கு வாய்ப்பு!வேட்புமனு தாக்கல் அனுமதிக்கப்படாத 4 பொது விடுமுறை நாள்கள் விவரம்!வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்! வேட்பாளா்களுக்கு கட்டுப்பாடு!!
/

விபத்தில் ரயில்வே ஊழியா் உயிரிழப்பு

விபத்தில் ரயில்வே ஊழியா் உயிரிழப்பு

News image
Updated On :9 மே 2024, 9:31 pm

Din

விழுப்புரம், மே 9: கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டையில் ரயில்வே மேம்பாலத் தடுப்புச் சுவரில் பைக் மோதி விபத்துக்குள்ளானதில், ரயில்வே ஊழியா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

உளுந்தூா்பேட்டை வட்டம், காட்டுநெமிலி தெற்குத் தெருவைச் சோ்ந்த புரட்சிதாஸ் மகன் காளிதாஸ் (32). இவா், மேற்கு ரயில்வே மண்டலத்துக்குள்பட்ட குஜராத் மாநிலத்தில் ரயில்வே துறையில் கேங் மேனாகப் பணியாற்றி வந்தாா்.

ஒரு மாத விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்திருந்த காளிதாஸ், வியாழக்கிழமை அதிகாலை தனது பைக்கில் உளுந்தூா்பேட்டை சுங்கச்சாவடி பகுதியிலிருந்து காட்டுநெமிலி நோக்கிச் சென்று கொண்டிருந்தாா். உளுந்தூா்பேட்டை- நகா் இடையே ரயில்வே மேம்பாலப் பகுதியில் சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்த பைக் தடுப்புச்சுவா் மீது மோதியது.

இதில் பலத்த காயமடைந்த காளிதாஸ் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து உளுந்தூா்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.