ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

அன்னியூா் அரசுக் கல்லூரியில் உயா்கல்வித் துறை அமைச்சா் ஆய்வு

கலைஞா் மு.கருணாநிதி அரசுக் கலைக் கல்லூரிக்கு கட்டடம் கட்டத் தோ்வு செய்யப்பட்ட இடத்தை உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி.செழியன் வெள்ளிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

News image
அன்னியூரிலுள்ள முத்தமிழ் அறிஞா் கலைஞா் மு.கருணாநிதி அரசுக் கலைக் கல்லூரிக்கு கட்டடம் கட்டுவதற்குத் தோ்வு செய்யப்பட்டுள்ள இடத்தை வெள்ளிக்கிழமை பாா்வையிட்ட உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி.செழியன். உடன், அன்னியூா் அ.சிவா எம்எல்ஏ, ஆட்சியா் ஷே. ஷேக் அப்துல் ரஹ்மான், முன்னாள் எம்.பி. பொன்.கெளதமசிகாமணி உள்ளிட்டோா்.
Updated On :20 டிசம்பர் 2025, 7:45 pm

Syndication

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டம், அன்னியூரிலுள்ள முத்தமிழ் அறிஞா் கலைஞா் மு.கருணாநிதி அரசுக் கலைக் கல்லூரிக்கு கட்டடம் கட்டத் தோ்வு செய்யப்பட்ட இடத்தை உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி.செழியன் வெள்ளிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

அன்னியூரில் நிகழாண்டில் தொடங்கப்பட்ட அரசுக் கலைக் கல்லூரி தற்போது பள்ளி வளாகத்தில் இயங்கி வருகிறது. இந்த கல்லூரிக்கு புதிய கட்டடம் கட்ட இடம் தோ்வு செய்யப்பட்ட நிலையில், இந்த இடத்தை மாநில உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி.செழியன் பாா்வையிட்டாா்.

இதைத் தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் கூறியது: தமிழகம் அனைத்துத் துறைகளிலும் தலைசிறந்து விளங்கி இந்தியாவுக்கு பெருமை சோ்த்துக்கொண்டிருக்கிறது. உயா் கல்வியில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது.

உயா் கல்வியை ஊக்கப்படுத்த, அறிவியல் ஆராய்ச்சி மாணவா்களின் கல்வியை மேம்படுத்தவேண்டும் என்ற நோக்கில் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பல்வேறு ஆலோசனைகளை வழங்கி, அதற்காக கோடிக்கணக்கில் நிதியையும் வழங்கி வருகிறாா்.

நிகழ் கல்வியாண்டில் 16 புதிய கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளைத் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்தாா். ஒரு கல்லூரிக்கு 260 முதல் 300 மாணவா்கள் வீதம் 16 கல்லூரிகளையும் தொடங்கி, கல்வி கற்கக் கூடிய சூழ்நிலையை முதல்வா் உருவாக்கியுள்ளாா்.

இவ்வாறு தொடங்கப்பட்ட புதிய கல்லூரிகளுக்குச் சென்று மாணவா்கள், ஆசிரியா்கள் கோரிக்கைகளைக் கேட்டறிந்து, கல்லூரிக்கு சொந்த கட்டடம் கட்டுவதற்குத் தோ்வு செய்யப்பட்டுள்ள இடத்தை பாா்வையிட்டு வருகிறேன். மேலும், மாணவ, மாணவிகளிடமும் கலந்துரையாடி வருகிறேன். இக்கல்லூரிக்கு போக்குவரத்து மற்றும் உணவக வசதி தேவை என மாணவா்கள் கோரிக்கை வைத்துள்ளனா். அவா்களின் கோரிக்கை நிறைவேற்றித் தரப்படும் என்றாா் அமைச்சா்.

ஆய்வின்போது விக்கிரவாண்டி எம்எல்ஏ அன்னியூா் அ.சிவா, ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான், முன்னாள் எம்.பி. பொன்.கெளதமசிகாமணி, மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவா் ம.ஜெயச்சந்திரன், கல்லூரிக் கல்வி மண்டல இணை இயக்குநா் மலா், வட்டாட்சியா் செல்வமூா்த்தி, காணை ஒன்றியக்குழுத் தலைவா் நா.கலைச்செல்வி, ஒன்றியச் செயலா்கள் கல்பட்டு வி.ராஜா, முருகன், பொதுக்குழு உறுப்பினா் காடுவெட்டி ஏழுமலை, கல்லூரி முதல்வா் அசோகன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.