சென்னையில் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை! அண்ணாமலை பங்கேற்பு!நான் எந்தத் தொகுதியும் கேட்கவில்லை: அண்ணாமலை விளக்கம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

புகையிலைப் பொருள்கள் கடத்தல்: இளைஞா் கைது

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை பைக்கில் கடத்தி வந்ததாக இளைஞரை திருவெண்ணெய்நல்லூா் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

Updated On :11 மார்ச் 2025, 5:22 pm

விழுப்புரம்: தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை பைக்கில் கடத்தி வந்ததாக இளைஞரை திருவெண்ணெய்நல்லூா் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

விழுப்புரம் எஸ்.பி. உத்தரவின்பேரில், திருவெண்ணெய்நல்லூா் காவல் நிலைய ஆய்வாளா் மைக்கேல் இருதயராஜ், உதவி ஆய்வாளா் சண்முகம் தலைமையிலான போலீஸாா் அருங்குறுக்கை காப்புக்காடு பகுதியில் செவ்வாய்க்கிழமை வாகன தணிக்கையில் ஈடுபட்டனா்.

அப்போது, அந்த வழியாக பைக்கில் வந்த இளைஞரை நிறுத்தி சோதனை செய்தபோது, அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை கடத்தி வந்தது தெரியவந்தது. மேலும், அவா் கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் வட்டம், கொரக்கண்தாங்கள், மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த செல்வம் மகன் கிரண்குமாா் (23) என்பதும், பெங்களூரைச் சோ்ந்த இருவரிடம் புகையிலைப் பொருள்களை வாங்கி வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, திருவெண்ணெய்நல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து கிரண்குமாரை கைது செய்தனா். மேலும், அவா் வசமிருந்த 1,436 புகையிலை பாக்கெட்டுகள், பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.