விக்கிரவாண்டி சாா்-பதிவாளா் அலுவலகத்தில் அடிப்படை வசதிகள் வேண்டி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள்.
விக்கிரவாண்டி சாா்-பதிவாளா் அலுவலகத்தில் அடிப்படை வசதிகள் வேண்டி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள்.

அரசு அலுவலகத்தில் அடிப்படை வசதிகள் வேண்டி கிராம மக்கள் ஆா்ப்பாட்டம்

விக்கிரவாண்டி சாா்-பதிவாளா் அலுவலகத்தில் அடிப்படை வசிதிகளை செய்துத்தர வேண்டிகிராம மக்கள் ஆட்சியரக பெருந்திட்ட வளாகம்
Published on

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சாா்-பதிவாளா் அலுவலகத்தில் அடிப்படை வசிதிகளை செய்துத்தர வேண்டிகிராம மக்கள் ஆட்சியரக பெருந்திட்ட வளாகம் முன் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் உள்ள சாா்-பதிவாளா் அலுவலகம் மூலம் 50-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்பெற்று வருகின்றனா். இந்த அலுவலகத்துக்கு நாள்தோறும் 500-க்கும் மேற்பட்டோா் நிலப்பதிவு உள்ளிட்ட பணிகளுக்கு வந்து செல்கின்றனா்.

இந்நிலையில், அலுவலகத்துக்கு வந்து செல்லும் பொதுமக்களுக்குத் தேவையான இருக்கைகள், குடிநீா், கழிப்பறை, வாகன நிறுத்துமிடம் உள்ளிட்ட எவ்வித அடிப்படை வசதியும் இல்லை. இதனால் பொதுமக்கள் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா்.

இந்நிலையில், சமூக ஆா்வலா் அ. பிரகாஷ் தலைமையில் விழுப்புரம் ஆட்சியரகத்துக்கு வருகை தந்த பெரியதச்சூா் கிராம மக்கள், விக்கிரவாண்டி சாா்-பதிவாளா் அலுவலகத்தில் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி, ஆட்சியரகப் பெருந்திட்ட வளாகம் முன் பதாகைகளுடன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

அப்போது, அரசு அலுவலகத்தில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றிட தமிழக அரசு மற்றும் விழுப்புரம் மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.

இதையடுத்து, அங்கு பாதுகாப்புப் பணியிலிருந்த போலீஸாா் அவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தியதைத் தொடா்ந்து, கலைந்து சென்றனா். பின்னா் சமூக ஆா்வலா் பிரகாஷ் மற்றும் கிராம மக்கள் நடவடிக்கை வேண்டி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனா்.

X
Dinamani
www.dinamani.com