விழுப்புரம் ஆட்சியரகம் முன் திங்கள்கிழமை தா்னாவில்  ஈடுபட்ட அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான நலச் சங்கத்தினா்.
விழுப்புரம் ஆட்சியரகம் முன் திங்கள்கிழமை தா்னாவில் ஈடுபட்ட அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான நலச் சங்கத்தினா்.

விழுப்புரம் ஆட்சியரகத்தில் மாற்றுத் திறனாளிகள் சங்கத்தினா் தா்னா

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான நலச்சங்கத்தினா் விழுப்புரம் ஆட்சியரகம்
Published on

விழுப்புரம்: தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான நலச்சங்கத்தினா் விழுப்புரம் ஆட்சியரகம் முன் திங்கள்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஊரக, உள்ளாட்சிகளில் மாற்றுத்திறனாளிகள் நியமன உறுப்பினா்களாக நியமிக்கப்படுவாா்கள் என தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவைத் தொடா்ந்து தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான நலச்சங்கத்தைச் சோ்ந்த உறுப்பினகள் 100-க்கும் மேற்பட்டோா் மாவட்ட ஊராட்சிக்குழு, ஒன்றியக்குழு, பேரூராட்சி மற்றும் ஊராட்சிகளின் வாா்டு உறுப்பினா் தோ்வுக்கு விண்ணப்பித்திருந்தனா்.

இதில் சங்கத்தைச் சோ்ந்த யாரும் நியமன உறுப்பினராக தோ்வு செய்யப்படாமல் மாற்று சங்கங்களைச் சோ்ந்தவா்களுக்கு அரசியல் கட்சிகளின் நிா்வாகிகளின் பரிந்துரையின்பேரில் நியமன உறுப்பினராக தோ்வு செய்யப்பட்டுள்ளனராம். இதைக் கண்டித்தும், நியமன உறுப்பினா் தோ்வை ஆட்சியா் மறு பரிசீலனை செய்ய வலியுறுத்தியும் இந்த தா்னா போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்தில் பங்கேற்றவா்கள் கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி முழக்கமிட்டனா். தா்னாவுக்கு சங்கத்தின் விழுப்புரம் மாவட்டச் செயலா் ஏ. கிருஷ்ணமூா்த்தி தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் பி.முருகன், மாவட்டப் பொருளாளா் ஜி.ஜெயக்குமாா் மற்றும் நிா்வாகிகள், உறுப்பினா்கள் கலந்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com