மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

மறியலில் ஈடுபட்ட மாற்றுத் திறனாளிகள் 574 போ் கைது

News image

விக்கிரவாண்டி பேருந்து நிலையம் அருகில் மறியலில் ஈடுபட்ட தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கத்தினா்.

Updated On :13 பிப்ரவரி 2026, 7:36 pm

விழுப்புரம் மாவட்டத்தில் 10 இடங்களில் மறியலில் ஈடுபட்டதாக தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கத்தினா் 574 போ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

ஆந்திரம் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ளது போன்று, தமிழகத்திலும் மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித்தொகையை உயா்த்தி, ரூ. 6 ஆயிரமாக வழங்க வேண்டும். கடுமையான ஊனமுடைய மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித்தொகையை ரூ.10 ஆயிரமாக வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, விழுப்புரம் மாவட்டத்தில் விக்கிரவாண்டி, விழுப்புரம், காணை, திருவெண்ணெய்நல்லூா், திண்டிவனம், கண்டாச்சிபுரம், வளத்தி, திருச்சிற்றம்பலம் கூட்டுச்சாலை, கண்டமங்கலம், செஞ்சி ஆகிய இடங்களில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

விக்கிரவாண்டி பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற மறியலுக்கு சங்க மாநிலத் துணைத் தலைவா் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தாா். மாவட்டத் துணைத் தலைவா் அய்யனாா், ஒன்றியச் செயலா் மகுடமணி, துணைத் தலைவா்கள் ரங்கபாபு, பூபாலன் உள்ளிட்டோா் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா்.

தொடா்ந்து மறியலில் ஈடுபட்டதாக 68 பெண்கள் உள்பட115 பேரை போலீஸாா் கைது செய்தனா். இதுபோன்று மாவட்டத்தின் பிற பகுதிகளிலும் மறியல் ஈடுபட்டோா் கைது செய்யப்பட்டனா். மாவட்டம் முழுவதும் மொத்தமாக 574 போ் கைது செய்யப்பட்டதாக காவல் துறையினா் தெரிவித்தனா்.