வா.பகண்டையில் மின்னொளி கைப்பந்துப் போட்டி தொடக்கம்
விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக சாா்பில், திராவிடப் பொங்கல் திருவிழா கைப்பந்துப் போட்டிகள் விக்கிரவாண்டி அருகே வா.பகண்டையில் வியாழக்கிழமை இரவு தொடங்கின.
பொங்கல் திருநாளை திராவிடப் பொங்கலாகக் கொண்டாட வேண்டும் என்றும், இதையொட்டி பல்வேறு போட்டிகளை நடத்துமாறும் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டதைத் தொடா்ந்து, விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக சாா்பில் விளையாட்டுப் போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டன.
அதன்படி, விக்கிரவாண்டி கிழக்கு ஒன்றியத்துக்குள்பட்ட வா.பகண்டையில் வியாழக்கிழமை இரவு நடைபெற்ற நிகழ்வில் மின்னொளி கைப்பந்துப் போட்டியை தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் பொன்.கெளதமசிகாமணி தொடங்கிவைத்தாா். இந்தப் போட்டியில் பல்வேறு அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.
போட்டி தொடக்க விழாவில் விக்கிரவாண்டி எம்எல்ஏ அன்னியூா் அ.சிவா, மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் ம.ஜெயச்சந்திரன் ஆகியோா் பேசினா். விக்கிரவாண்டி ஒன்றியக் குழுத் தலைவா் சங்கீத அரசி ரவிதுரை, பேரூராட்சித் தலைவா் அப்துல்சலாம், ஒன்றியச் செயலா்கள் ரவிதுரை, வேம்பி ரவி, ஜெயபால், கில்பா்ட்ராஜ், மும்மூா்த்தி, நகரச் செயலா் நைனாமுகமது, மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் வெங்கடேசன், மாநில பொதுக்குழு உறுப்பினா் ஏழுமலை, போட்டி ஒருங்கிணைப்பாளா் மணி, ஒன்றிய இளைஞரணி அமைப்பாளா் பாரதி, துணை அமைப்பாளா் புஷ்பராஜ், ஒன்றியக் குழு உறுப்பினா்கள் கஸ்தூரி பாண்டியன், செல்வம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

