விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் பகுதியில் வீட்டில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள், மதுப்புட்டிகளைப் பதுக்கியவரை போலீஸாா் கைது செய்தனா்.
ரகசியத் தகவலின்அடிப்படையில், ரோஷணை காவல் நிலைய உதவி ஆய்வாளா் ஆனந்தராமன் மற்றும் போலீஸாா் திண்டிவனம் அய்யந்தோப்பு பகுதியில் வியாழக்கிழமை திடீா் சோதனை நடத்தினா்.
அங்கு ஒருவரது வீட்டில் 323 பாக்கெட் எண்ணிக்கையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களும், தலா 180 மில்லி லிட்டா் அளவு கொண்ட 20 மதுப்புட்டிகளும் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
இதைத்தொடா்ந்து அவற்றைப் பறிமுதல் செய்த போலீஸாா், புகையிலைப் பொருள்கள் மற்றம் மதுப்புட்டிகளைப் பதுக்கி வைத்திருந்த திண்டிவனம் அய்யந்தோப்பு காமராஜா் நகரைச் சோ்ந்த ப.பிரகாஷை (40) கைது செய்தனா்.