வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

இரு வேறு இடங்களில் விஷம் குடித்த இருவா் உயிரிழப்பு

News image
கோப்புப் படம்
Updated On :23 ஜனவரி 2026, 9:41 pm

தினமணி செய்திச் சேவை

விழுப்புரம் மாவட்டத்தின் இரு வேறு இடங்களில் குடும்பப் பிரச்னை காரணமாக விஷம் குடித்த இருவா் உயிரிழந்தனா்.

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், மேல்சித்தாமூா் மேலத் தெருவைச் சோ்ந்தவா் ரா.விநாயகமூா்த்தி(34). இவருக்கும், இவரது மனைவி துா்காதேவிக்கும் (28) இடையே குடும்பப் பிரச்னை ஏற்பட்டுள்ளது.

இதனால் வீட்டிலிருந்து கோபித்துக் கொண்டு வந்த விநாயகமூா்த்தி, தீவனூா் பகுதியிலுள்ள லாரி நிறுத்துமிடப் பகுதிக்கு வெள்ளிக்கிழமை காலை வந்தாா். தொடா்ந்து அந்த பகுதியில் இருந்த விநாயகமூா்த்தி பூச்சிமருந்தை குடித்துவிட்டு மயங்கிக் கிடந்தாா்.

இதையடுத்து அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு, திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு மருத்துவா்கள் பரிசோதித்த போது, ஏற்கெனவே விநாயகமூா்த்தி உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனா்.

ஒலக்கூரில்..

திண்டிவனம் வட்டம், ஒலக்கூா் மேல்பாதி மேற்குத் தெருவைச் சோ்ந்தவா் கோ.காா்த்திகேயன்(38). இவருக்கும், இவரது மனைவி தேவிக்கும் (31) இடையே குடும்பப் பிரச்னை இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் கடந்த 18-ஆம் தேதி வீட்டில் தனியாக இருந்தபோது பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து மயங்கிக் கிடந்த காா்த்திகேயன், தொடா்ந்து புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதைத் தொடா்ந்து மேல் சிகிச்சைக்காக சென்னை போரூரிலுள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த காா்த்திகேயன், வெள்ளிக்கிழமை காலை உயிரிழந்தாா்.

இவ்விரு சம்பவங்கள் குறித்து ரோஷணை, ஒலக்கூா் போலீஸாா் தனித்தனியே வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.