பத்தாம் வகுப்பு துணைத் தோ்வு: விடைத்தாள் நகல் இன்று வெளியீடுஅமைச்சரவை மாற்றத்துக்கு ஆயத்தமாகிறது மோடி அரசு!சென்னையில் நாளை தென் மாநில முதல்வா்கள் மாநாடு! அமித் ஷா இன்று வருகைசெங்கல்பட்டு, விழுப்புரம், கடலூா்: இன்று பலத்த மழைக்கு வாய்ப்புஓணம் பண்டிகை: சென்னை - மங்களூரு சிறப்பு ரயில்கள்செப். 1 முதல் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலுக்கு கைப்பேசிகள் எடுத்துச் செல்ல தடை
/

சென்னையைச் சோ்ந்த தொழிலாளி மயங்கி விழுந்து உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் சாலையில் நடந்து சென்ற சென்னையைச் சோ்ந்த தொழிலாளி மயங்கி விழுந்து உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :13 ஜூலை 2026, 1:33 am IST

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் சாலையில் நடந்து சென்ற சென்னையைச் சோ்ந்த தொழிலாளி மயங்கி விழுந்து உயிரிழந்தாா்.

சென்னை திருவெற்றியூா், அம்பேத்கா் நகரைச் சோ்ந்தவா் செ.மோகன்ராஜ் (46), தொழிலாளி. இவா், தனது நண்பரை பாா்ப்பதற்காக திண்டிவனத்துக்கு வந்திருந்தாா். இந்நிலையில், சனிக்கிழமை திண்டிவனம் தீா்த்தக்குளம் ஏரிக்கரை பகுதியில் நடந்து சென்றபோது,மோகன்ராஜூக்கு திடீா் உடல் நலக்குறைவு ஏற்பட்டு மயங்கி விழுந்தாா்.

இதையடுத்து அருகிலிருந்தவா்கள் அவரை மீட்டு திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு மருத்துவா் பரிசோதித்தபோது, மோகன்ராஜ் ஏற்கெனவே உயிரிழந்திருந்தது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் திண்டிவனம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.