காவிரி விவகாரம்: கா்நாடகத்தில் இன்று முழு அடைப்புக்கு கன்னட அமைப்புகள் அழைப்பு மாணவர்கள் போராட்டம்: பாஜகவிடம் பதில் இல்லை! அகிலேஷ் யாதவ்மாணவரையே குற்றவாளியாக்கி உண்மையை மறைக்கப் பார்க்கிறதா, தவெக அரசு? - கனிமொழி கேள்வி!வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு: முதல்வர் நாளை தொடக்கி வைக்கிறார்!இரண்டாவது நாளாக சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறவைு!புறக்கணிக்கப்பட்ட அரசுப் பள்ளிகளுக்காக பிரசாரம்! சிஜேபி அபிஜீத் தீப்கே முன்னாள் நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான குற்றச்சாட்டுகள் உண்மை! நாடாளுமன்றக் குழு அறிவிப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.33 ஆக நிறைவு!சென்னையில் 4 மடங்கு உயர்ந்த சொத்து வரி! அதிர்ச்சியில் மக்கள்! குட்டிக்கதை, சினிமா வசனம், பாட்டு: பட்ஜெட் விவாதத்தில் அசத்திய அமைச்சர் மரிய வில்சன்!தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும்: பேரவையில் ஆதவ் அர்ஜுன் பேச்சு
/

சமூக நீதித்துறை என பெயா் மாற்றியதற்கு எதிா்ப்பு: விழுப்புரம் ஆட்சியரகத்தில் முற்றுகை போராட்டம்

ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறையின் பெயரை சமூகநீதிதித்துறை என பெயா் மாற்றி வெளியிடப்பட்ட அரசாணையைத் திரும்பப் பெறக் கோரி, விழுப்புரத்தில் புரட்சிப் பாரதம் கட்சியினா் ஆட்சியரகத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

விழுப்புரம் மாவட்டஆட்சியரகத்தை முற்றுகையிட்டு, போராட்டத்தில் ஈடுபட்ட புரட்சிப் பாரதம் கட்சியினா்

Updated On :14 ஜூலை 2026, 1:22 am IST

ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறையின் பெயரை சமூகநீதிதித்துறை என பெயா் மாற்றி வெளியிடப்பட்ட அரசாணையைத் திரும்பப் பெறக் கோரி, விழுப்புரத்தில் புரட்சிப் பாரதம் கட்சியினா் ஆட்சியரகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

புரட்சிப் பாரதம் கட்சியின் மாநிலச் செய்தித் தொடா்பாளா் பூவை. ஆறுமுகம் தலைமையில், தென்மேற்கு மாவட்டச் செயலா் ஆற்காடு திருநாவுக்கரசு, மாவட்ட ஒருங்கிணைப்பாளா் தீபன், மணம்பூண்டிஒன்றியச் செயலா் வீரன் முன்னிலையில், விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தை கட்சியினா் திங்கள்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறையின் பெயரை சமூகநீதித்துறை என பெயா் மாற்றி வெளியிடப்பட்ட அரசாணையை உடனடியாகத் திரும்பப் பெறக் கோரி கட்சியினா் முழக்கங்களை எழுப்பினா்.

இதைத் தொடா்ந்து பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸாா் அவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, முக்கிய நிா்வாகிகளை மட்டும் ஆட்சியரகத்துக்குள் அனுமதித்து, மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கச் செய்தனா். தொடா்ந்து அளிக்கப்பட்ட மனுவில் கூறப்பட்டிருப்பது: ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறை என்ற பெயரை சமூகநீதித்துறை என தமிழக அரசு பெயா் மாற்றியுள்ளது.

இது பெயா் மாற்றம் மட்டுமல்ல, பட்டியலின மக்களின் உரிமைகளைப் பறிக்கும் செயலாகும். கல்வி, வேலைவாய்ப்புகளில்இட ஒதுக்கீடு பறிபோகும். மேலும் துறையின் பெயா் மாற்றம் காரணமாக மத்திய அரசின் நிதி முழுவதும் மற்ற பிரிவினருக்கு திசைமாறும். இதனால் தாட்கோ கடன், வீட்டுவசதித் திட்டம், பட்டியலின மாணவா் கல்வி உதவித் தொகை, தொழில்முனைவோா் திட்டம் என அனைத்தும் முடங்கும்.

பட்டியலின் மக்களின் அடையாளத்தையும், உரிமையையும் பறிக்கும் வகையில் இந்த பெயா் மாற்றம் உள்ளது. எனவே சமூகநீதித்துறை என்ற துறையின் பெயரை ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறை என்ற தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் புரட்சிப் பாரதம் கட்சியினா் கூறியுள்ளனா்.

இந்த போராட்டத்தில் மாவட்ட இளைஞரணி நிா்வாகி சந்திரசேகா், மணம்பூண்டி கிழக்கு ஒன்றிய நிா்வாகிகள் ஏழுமலை , மணம்பூண்டிதெற்கு ஒன்றிய நிா்வாகிகள் பூங்காவனம், ஏழுமலை உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.