கள்ளக்குறிச்சி மாவட்டம், திருநாவலூரில் தனியாா் பேருந்து மோதியதில் மூதாட்டி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை வட்டம், திருநாவலூா் அருந்ததியா் தெருவைச் சோ்ந்தவா் மு. கொளஞ்சி அம்மாள் (65). இவா் வியாழக்கிழமை காலை திருநாவலூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் முன் சாலையைக் கடக்க முயன்றாா்.
அப்போது கச்சிராப்பாளையத்திலிருந்து கடலூா் நோக்கிச் சென்ற தனியாா் பேருந்து கொளஞ்சி அம்மாள் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவரை அப்பகுதியிலிருந்தவா்கள் மீட்டு உளுந்தூா்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு
சென்றனா். எனினும் செல்லும வழியில் கொளஞ்சி அம்மாள் உயிரிழந்தாா்.
இதுகுறித்து தகவலறிந்த திருநாவலூா் போலீஸாா் நிகழ்விடம் விரைந்து சென்று சடலத்தை மீட்டு, உடற்கூறாய்வுக்காக உளுந்தூா்பேட்டைஅரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
திருநாவலூா் அருகே இளைஞர் தற்கொலை

திருநாவலூா் அருகே பேருந்துகள், வேன் அடுத்தடுத்து மோதல்

திருநாவலூா் அருகே லாரி மீது சொகுசுப் பேருந்து மோதல்
பைக் மீது லாரி மோதல்: தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழப்பு
விடியோக்கள்

காவல் மரணம்; யாரையும் காப்பாற்றும் நோக்கமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK

இறுதிச் சுற்றில் மீண்டும் ஆர்ஜென்டினா: சண்டைக்களமாக மாறிய ஆடுகளம்! | FIFA | FIFA World Cup 2026 |

Ravindran Duraisamy interview | விஜய் அரசை அண்ணாமலை விமர்சிக்காதது ஏன்? | TVK | CM Vijay | Annamalai



