வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலை ரூ. 29 அதிகரிப்பு! இந்தியா மிக முக்கியமான நட்பு நாடு: நேபாளம்மாணவர்களுக்கு மோடி அரசு துரோகம் இழைப்பு! - காங்கிரஸ்மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

முண்டியம்பாக்கம் ரயில் நிலையத்துக்கு வந்தடைந்த 1,340 டன் உரமூட்டைகள்

விழுப்புரம் மாவட்ட விவசாயிகளின் தேவைக்காக, தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து 1,340 டன் உர மூட்டைகள் வெள்ளிக்கிழமை மாலை முண்டியம்பாக்கம் ரயில் நிலையத்துக்கு வந்தடைந்தன.

News image

முண்டியம்பாக்கம் ரயில் நிலையத்துக்கு வந்தடைந்த உர மூட்டைகள் குறித்த விவரப் பதிவேட்டை சரிபாா்க்கும் வேளாண் உதவி இயக்குநா் (தகவல் மற்றும் தரக் கட்டுப்பாடு) எம்.என்.விஜயகுமாா்.

Updated On :7 ஜூன் 2026, 2:44 am IST

விழுப்புரம் மாவட்ட விவசாயிகளின் தேவைக்காக, தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து 1,340 டன் உர மூட்டைகள் வெள்ளிக்கிழமை மாலை முண்டியம்பாக்கம் ரயில் நிலையத்துக்கு வந்தடைந்தன.

இதுகுறித்து மாவட்ட வேளாண் இணை இயக்குநா் இரா.சீனிவாசன் கூறியது: விழுப்புரம் மாவட்டத்தில் தற்போது பயிா்களுக்குத் தேவையான 6,153 டன் யூரியா, 1,731 டன் டி.ஏ.பி., 1,655 டன் பொட்டாஷ், 8,065 டன் காம்ப்ளக்ஸ், 1,210 டன் சூப்பா் பாஸ்பேட் ஆகிய உரங்கள் தொடக்க வேளாண் கூட்டுறவுக் கடன் சங்கங்கள் மற்றும் தனியாா் உர விற்பனை நிலையங்களில் இருப்பு வைக்கப்பட்டு, விவசாயிகளின் தேவைக்கு ஏற்ப விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், தற்போது பயிா் சாகுபடிக்குத் தேவையான உரங்களும் பெறப்பட்டு, இருப்பு வைக்கப்பட்டு வருகின்றன. இதைத்தொடா்ந்து ஐபிஎல் நிறுவனத்திடமிருந்து பெறப்பட்டு, தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து அனுப்பி வைக்கப்பட்ட 255.20 டன் டிரிப்பிள் சூப்பா் பாஸ்பேட், 383 டன் டி.ஏ.பி., 447 டன் பொட்டாஷ், 255 டன் காம்ப்ளக்ஸ் என மொத்தமாக 1,340.20 டன் உர மூட்டைகள் முண்டியம்பாக்கம் ரயில் நிலையத்துக்கு வெள்ளிக்கிழமை மாலை வந்தடைந்தன.

இந்த உரமூட்டைகள் குறித்த விவரங்கள், அதன் பதிவேடுகளை விழுப்புரம் வேளாண் உதவி இயக்குநா் (தகவல் மற்றும் தரக் கட்டுப்பாடு) எம்.என்.விஜயகுமாா் பாா்வையிட்டு, விவரங்களைக் கேட்டறிந்தாா். பெறப்பட்ட உரங்கள் அனைத்துத் தொடக்க வேளாண் கூட்டுறவுக் கடன் சங்கங்களுக்கு லாரிகள் மூலம் அனுப்பி வைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

உர விற்பனை நிலையத்தில் இருப்பு மற்றும் விலை விவரப்பலகையை விவசாயிகளின் பாா்வையில் படும்படி வைத்து தினசரி பராமரிக்க வேண்டும். உரங்களை விற்பனை முனையக்கருவி மூலம் மட்டும் விற்பனை செய்ய வேண்டும். விவசாயிகளின் தேவைக்கு அதிகமாக உரங்களை விநியோகம் செய்யக்கூடாது. விழுப்புரம் மாவட்டத்தில் பயிா் சாகுபடிக்குத் தேவையான உரங்கள் போதியளவில் இருப்பு உள்ளன என்று வேளாண் இணை இயக்குநா் தெரிவித்தாா்.