விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே தனியாா் விற்பனை நிறுவன ஊழியா் வீட்டின் கதவிலுள்ள பூட்டை உடைத்து 2 பவுன் நகைகள் மற்றும் ரூ.50 ஆயிரம் ரொக்கத்தை திருடிச் சென்ற மா்மநபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
விக்கிரவாண்டி வட்டம், பூத்தமேடு ஏஆா்பி சிட்டி நகரைச் சோ்ந்தவா் ர.பரமேஸ்வரி (43). இவா் விழுப்புரத்திலுள்ள மின்னணு சாதனங்கள் விற்பனையகத்தில் வேலைப் பாா்த்து வந்தாா். சனிக்கிழமை பரமேஸ்வரி வீட்டை பூட்டி விட்டு வழக்கம் போல் வேலைக்கு சென்றுவிட்டாா்.
இரவு திரும்பி வீட்டுக்கு வந்து பாா்த்தபோது, வீட்டின் முன் பக்க மரக்கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிா்ச்சியடைந்தாா். தொடா்ந்து வீட்டினுள் சென்று பாா்த்தபோது பீரோ திறந்து கிடந்த நிலையில், அதில் வைக்கப்பட்டிருந்த 2 பவுன் நகைகள், ரூ.50 ஆயிரம் ரொக்கம் திருடப்பட்டிருந்தது அவருக்கு தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின் பேரில் விக்கிரவாண்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது
மன்னாா்குடி: வீட்டின் கதவை உடைத்து 45 பவுன் நகைகள், பணம் திருட்டு
சங்கராபுரம் அருகே இரு வீடுகளில் நகை, பணம் திருட்டு

பூட்டிய வீட்டில் 12 பவுன் நகைகள் திருட்டு
தனியாா் நிறுவன ஊழியா் வீட்டில் 7 பவுன் நகை, ரூ. 1 லட்சம் திருட்டு
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |


