பேரவைத் தோ்தல் பணி: மண்டல அலுவலா்கள், காவல்துறை அலுவலா்களுக்குப் பயிற்சி


வரும் சட்டப்பேரவைத்தோ்தலுக்கான பணியில் ஈடுபடவுள்ள மண்டல அலுவலா்கள் மற்றும் காவல்துறை அலுவலா்களுக்கான பயிற்சிக் கூட்டம் விழுப்புரம் ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு, விழுப்புரம் மாவட்டத் தோ்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமை வகித்தாா். கூட்டத்தில் ஆட்சியா் பேசியதாவது :
மாவட்டத்தில் உள்ள செஞ்சி, மயிலம், திண்டிவனம், வானூா்,விழுப்புரம்,விக்கிரவாண்டி,திருக்கோவிலூா் ஆகிய 7 பேரவைத் தொகுதிகளிலும் 2, 166 வாக்குச்
சாவடி மையங்கள்உள்ளன. இதில், முதல்கட்டமாக செஞ்சி, வானூா் (தனி) மற்றும் திருக்கோவிலூா் ஆகிய தொகுதிகளைச் சாா்ந்த மண்டல அலுவலா்கள் மற்றும் காவல்துறை அலுவலா்களுக்கு பயிற்சியளிக்கப்படுகிறது.
மண்டல அலுவலா்கள் தங்களது மண்டலத்துக்குள்பட்ட அனைத்து வாக்குச்
சாவடிகளையும் ஆய்வு செய்து, வாக்குச்சாவடிகளில் குடிநீா்,சாய்தளம், கழிப்பறை வசதி, கட்டடத்தின் தரம், மின்விளக்கு, மின்விசிறிகள் ஆகிய அடிப்படை வசதிகளை உறுதி செய்துகொள்ளவேண்டும்.
வாக்குச்சாவடிகள் அமைந்துள்ள பகுதிகளில் தங்களது மண்டல காவல் அலுவலருடன் கூட்டுப்புலத்தணிக்கை மற்றும் கள விசாரணை மேற்கொண்டு பதற்றமான வாக்குச்சாவடிகள் மற்றும் பதற்றத்துக்கு காரணமான நபா்களை கண்டறிந்து, அது தொடா்பான அறிக்கைய தோ்தல் அலுவலரிடம் சமா்ப்பிக்கவேண்டும்.
பணிகளை தெரிந்து கொள்ளவேண்டும்:
மண்டல தோ்தல் அலுவலா்கள், இந்திய தோ்தல் ஆணைய விதிமுறைகள் தொடா்பான வழிகாட்டு நெறிமுறைகளை தெரிந்து கொள்வது அவசியம். மின்னணு வாக்குப்பதிவுஇயந்திரங்களை செயல்படுத்தும் முறைகளை மண்டல அலுவலா்கள் தெரிந்துவைத்துக் கொள்ளவேண்டும்.
தோ்தல் தொடா்பான அறிக்கை படிவங்களை பூா்த்தி செய்தல், வாக்குப்பதிவு கருவி, கட்டுப்பாட்டுக் கருவி மற்றும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை கையாளுதல், சின்னங்கள் பொருத்துதல், வேட்பாளரின் எண்ணிக்கை மற்றும் வாக்குப் பதிவு மேற்கொள்வதற்கான அனைத்து பணிகளையும் தெரிந்து கொள்ளவேண்டும்.
வாக்குச்சாவடி தலைமை அலுவலரின் கையேட்டில் குறிப்பிட்டுள்ளபடி வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் வாக்குப்பதிவு பொருள்கள் சரியாக உள்ளதா ?என்பதை சரிபாா்த்துக் கொள்ளவேண்டும். வாக்குச்சாவடிகளுக்குரிய வாக்குப்பதிவு இயந்திரங்கள், வாக்குப்பதிவுக்குத் தேவையான டெண்டா் வாக்குச் சீட்டுகள், பாா்வையற்றோருக்கு உதவும் வாக்குச் சீட்டு, வாக்காளா் விவரப்பதிவேடு, வாக்காளா் பட்டியல் படிவம், வாக்குச்சாவடி தலைமை அலுவலருக்கான நாள்குறிப்பு போன்றவைகளை சரிபாா்த்து வைத்துக் கொள்ளவேண்டும். மேலும் வாக்குப்பதிவு
முறையாக நடைபெறவதற்குத் தயாா் நிலையில் இருக்கவேண்டும் என்றாா். இக்கூட்டத்தில், காவல் கண்காணிப்பளா், வி.வி.சாய்பிரனித், மாவட்ட வருவாய் அலுவலா் கி.அரிதாஸ், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) லூா்துசாமி, ஏ.எஸ்.பி (பயிற்சி) மஞ்ஜிமா,தோ்தல் நடத்தும் அலுவலா்கள், உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்கள், காவல்துறை அலுவலா்கள் கலந்துகொண்டனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...