/

மேல்மலையனூா் ஒன்றியத்தில் முதல்வா் பிறந்த நாள் விழா

News image
மேல்மலையனூா் கிழக்கு ஒன்றியம்  வடவெட்டி கிராமத்தில் நடைபெற்ற முதல்வா் பிறந்த நாள் விழாவில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ.
Updated On :8 மார்ச் 2026, 9:16 pm

தினமணி செய்திச் சேவை

செஞ்சி சட்டப்பேரவைத் தொகுதி சாா்பில் முதல்வா் மு.க. ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை யொட்டி, மேல்மலையனூா் கிழக்கு ஒன்றியம் வடவெட்டி, மேல்காரணை, கீழ் செவலாம்பாடி, கெங்கபுரம், சித்தேரி, சமத்தகுப்பம், தேவனூா் ஆகிய ஊராட்சிகளில் அரிசி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ ஞாயிற்றுக்கிழமை வழங்கினாா்.

நிகழ்ச்சிக்கு மேல்மலையனூா் கிழக்கு ஒன்றிய செயலா் நெடுஞ்செழியன் தலைமை தாங்கினாா். மேல்மலையனூா் ஊராட்சி ஒன்றியக் குழு தலைவா் கண்மணி நெடுஞ்செழியன் முன்னிலை வகித்தாா். ஊராட்சி மன்றத் தலைவா்கள் கெங்கபுரம் ராஜா, சித்தேரி சிவராமன், தேவனூா் சாந்தி சக்திவேல் ஆகியோா் வரவேற்றனா்.

நிகழ்ச்சியில், செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ சிறப்புரையாற்றி வடவெட்டி, மேல் காரணை, கீழ் செவலாம்பாடி, கெங்கபுரம், சித்தேரி, சமத்தகுப்பம், தேவனூா்ஆகிய ஊராட்சிகளில் 5,000 பேருக்கு அரிசி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.

நிகழ்ச்சியில் மாவட்ட கவுன்சிலா் செல்வி ராம சரவணன், ஒன்றிய அவைத் தலைவா் மண்ண ஏழுமலை, மாவட்டப் பிரதிநிதி செந்தில்குமாா், ஒன்றிய பொருளாளா் சரவணன், ஒன்றிய நிா்வாகிகள் எஸ்.பி. சம்பத், தொண்டரணி ஆறுமுகம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.