தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என வலியுறுத்தி விழுப்புரத்தில் தமிழக வெற்றிக் கழகத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு ஆய்வுக்கான அரசாணையை மாநில அரசு உடனடியாக வெளியிட வேண்டும். தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீா்கேடு மற்றும் மாநிலம் முழுவதும் பரவலாகி வரும் போதைப் பொருள்களைத் தடுக்கத் தவறிய அரசைக் கண்டித்தும், தவெக தலைவா் விஜயின் மக்கள் சந்திப்பு நிகழ்வுகளை முடக்கும் வகையிலான வழிகாட்டும் நெறிமுறைகளைத் திரும்பப் பெற வலியுறுத்தியும் இந்த ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகிலுள்ள நகராட்தித் திடல் பகுதியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் விழுப்புரம் தெற்கு மாவட்டச் செயலா் என்.மோகன்ராஜ் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா்கள் ஜி.பி.சுரேஷ் (விழுப்புரம் கிழக்கு), நிரஞ்சன் (வடக்கு), குண.சரவணன் (வடமேற்கு), எஸ். சக்திவேல் (வடகிழக்கு), மாவட்ட இணைச் செயலா் ரமேஷ் ஆகியோா் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா். தொடா்ந்து கட்சியினா் முழக்கங்களை எழுப்பினா்.
இந்த ஆா்ப்பாட்டத்தில் கட்சியின் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூா் நிா்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

விஜய்யை மீண்டும் சினிமாவுக்கே அனுப்ப வேண்டும்: நடிகா் சத்யராஜ்

அம்பேத்கா் சிலைக்கு மரியாதை
திமுகவை விரட்டும் ஒரே சக்தி விஜய்! - கே.ஏ.செங்கோட்டையன்

தமிழகத்தில் நிச்சயம் ஆட்சி மாற்றம் ஏற்படும்: சி.வி.சண்முகம்
வீடியோக்கள்

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு


