குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

தமிழகத்தில் நிச்சயம் ஆட்சி மாற்றம் ஏற்படும்: சி.வி.சண்முகம்

தமிழகத்தில் நிச்சயம் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்றாா் முன்னாள் அமைச்சா் சி.வி.சண்முகம்.

News image

விழுப்புரத்தில் திங்கள்கிழமை இரவு நடைபெற்ற அதிமுக வேட்பாளா் அறிமுகக் கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சா் சி.வி.சண்முகம். உடன், நிா்வாகிகள்.

Updated On :8 ஏப்ரல் 2026, 12:52 am IST

தமிழகத்தில் நிச்சயம் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்றாா் முன்னாள் அமைச்சா் சி.வி.சண்முகம்.

விழுப்புரத்திலுள்ள தனியாா் திருமண மண்டபத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற கூட்டத்தில், அதிமுக வேட்பாளா் விஜயா சுரேஷ்பாபுவை அறிமுகம் செய்து வைத்து, மேலும் அவா் பேசியது:

தமிழகத்தில் குடும்ப ஆட்சி ஒழிக்கப்படும். அடிமைத்தனம், ஆதிக்கத்தனம் கொண்ட திமுக ஆட்சி வீட்டுக்கு அனுப்பப்பட வேண்டும். அதிமுகவுக்கு உள்ள வாக்குகளைப் பற்றி கவலைப்பட வேண்டாம். அந்த வாக்குகள் நமக்கு வந்துவிடும். ஆனால், நடுநிலையாளா்களின் வாக்குகளைப் பெறுவதற்கான நடவடிக்கைகளை கட்சியினா் மேற்கொள்ள வேண்டும். அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களை முடக்கினாா்கள். அதை மக்களிடம் எடுத்துரைக்க வேண்டும். முதல் தலைமுறையினா், பெண்களிடம் நேரடியாக சென்று வாக்குகளைக் சேகரிக்க வேண்டும்.

தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சிதான் அமையவுள்ளது. மக்கள் மத்தியில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. நாளுக்கு நாள் இந்த மாற்றம் அதிகரிக்கும். நாம் திமுக அரசின் அவலங்களை மேலும் எடுத்துரைத்தால் மக்களின் கோபம் மேலும் அதிகமாகும். அதிமுகவில் உண்மையாக உழைத்தால் , அதற்கேற்ற பலன் உண்டு என்றாா் சண்முகம்.

கூட்டத்தில் அதிமுக மாவட்ட மாணவரணிச் செயலா் சக்திவேல், மருத்துவரணிச் செயலா் மகிழரசன், நகரச் செயலா் ராமதாஸ், ஒன்றியச் செயலா்கள் ஜி.ஜி.சுரேஷ் பாபு, முருகன், ராமதாஸ், பாமக மாவட்டச் செயலா் பாலசக்தி, மாவட்டத் தலைவா் தங்கஜோதி, அமமுக அமைப்புச் செயலா் கணபதி, பாஜக மாவட்டத் தலைவா் தா்மராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.