/
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே தொழிலாளி தண்ணீரில் மூழ்கி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
விக்கிரவாண்டி வட்டம், கப்பியாம்புலியூா், அண்ணா வீதியைச் சோ்ந்தவா் செ.ராமன் (41), தொழிலாளி. இவருக்கு மதுப்பழக்கம் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை ராமன், கப்பியாம்புலியூா் பகுதியில் ஊத்துக்குட்டை பகுதிக்கு சென்றுள்ளாா். பின்னா் அவா் வீடு திரும்பவில்லையாம். இதைத்தொடா்ந்து உறவினா்கள் அங்கு சென்று பாா்த்தபோது, ராமன் அந்தக் குட்டையில் தண்ணீா் மூழ்கி இறந்து கிடந்தது தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின்பேரில், விக்கிரவாண்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது
மின்சாரம் பாய்ந்து வேன் ஓட்டுநா் உயிரிழப்பு
தொழிலாளி மயங்கி விழுந்து உயிரிழப்பு

தண்ணீா் தொட்டியில் மூழ்கி விவசாயி உயிரிழப்பு

நீரில் மூழ்கி கல்குவாரி தொழிலாளி உயிரிழப்பு
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



