வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

429 பயனாளிகளுக்கு மிக்ஸி, கிரைண்டர்

கடலூரை அடுத்த நாணமேடு கிராமத்தில் ரூ.22 லட்சம் மதிப்பீட்டிலான அரசின் விலையில்லா மிக்ஸி, கிரைண்டர் மற்றும் மின்விசிறிகளை 429 பயனாளிகளுக்கு மாநில மாசுக் கட்டுப்பாட்டுத் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் சனிக்கிழமை வழங்கினார்.

News image
Updated On :5 ஜனவரி 2013, 6:52 pm

தினமணி

கடலூரை அடுத்த நாணமேடு கிராமத்தில் ரூ.22 லட்சம் மதிப்பீட்டிலான அரசின் விலையில்லா மிக்ஸி, கிரைண்டர் மற்றும் மின்விசிறிகளை 429 பயனாளிகளுக்கு மாநில மாசுக் கட்டுப்பாட்டுத் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் சனிக்கிழமை வழங்கினார்.

இதற்கான நிகழ்ச்சி நாணமேட்டில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கடலூர் மாவட்ட ஆட்சியர் ரா.கிர்லோஷ்குமார் தலைமை வகித்துப் பேசுகையில், கடலூர் மாவட்டத்தில் உள்ள 9 எம்எல்ஏ தொகுதிகளிலும் 83 ஆயிரத்து 952 பயனாளிகளுக்கு அரசின் விலையில்லா மிக்ஸி, கிரைண்டர் மற்றும் மின்விசிறிகள் வழங்கப்பட்டுள்ளன.

நடப்பாண்டில் 1 லட்சத்து 20 ஆயிரம் பயனாளிகளுக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.

அதைத் தொடர்ந்த அமைச்சர் எம்.சி.சம்பத் பயனாளிகளுக்கு அரசின் விலையில்லா மிக்ஸி கிரைண்டர்களை வழங்கினார்.

 மாவட்ட ஊராட்சித் தலைவர் மல்லிகா வைத்தியலிங்கம், ஒன்றியக் குழுத் தலைவர் மணிமேகலை மற்றும் மக்கள் தொடர்பு அலுவலர் கு.தமிழ்செல்வராஜன், வட்டாட்சியர் எழிலன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.