யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

ரயில்வே சுரங்கப் பாதை: மே மாதத்துக்குள் முடிவடையும்

கடலூர் திருப்பாப்புலியூரில் மேற்கொள்ளப்பட்டு வரும் சுரங்கப்பாதை பணி இந்தஆண்டு மே மாதத்துக்குள் முடித்து நெடுஞ்சாலைத் துறையிடம் ஒப்படைக்கத் திட்டமிட்டுள்ளதாக அப்பணியை மேற்கொண்டு வரும் மாலதி கன்ஸ்ட்ரக்ஷன் உரிமையாளர் கூறினார்.

News image
Updated On :5 ஜனவரி 2013, 6:52 pm

தினமணி

கடலூர் திருப்பாப்புலியூரில் மேற்கொள்ளப்பட்டு வரும் சுரங்கப்பாதை பணி இந்தஆண்டு மே மாதத்துக்குள் முடித்து நெடுஞ்சாலைத் துறையிடம் ஒப்படைக்கத் திட்டமிட்டுள்ளதாக அப்பணியை மேற்கொண்டு வரும் மாலதி கன்ஸ்ட்ரக்ஷன் உரிமையாளர் கூறினார்.

கடலூர் எம்.பி. அழகிரியின் முயற்சியின் விளைவாக நெருக்கடி மிகுந்த கடலூர் திருப்பாப்புலியூர் ரயில்வே கிராஸிங்கில் சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இப்பணிக்களை கடலூர் எம்பி அழகிரி சனிக்கிழமை பார்வையிட்டார்.

அதைத் தொடர்ந்து பணி தாமதமாக நடந்து வருவதற்கான காரணம் குறித்து ஒப்பந்ததாரரிடம் கேட்டறிந்தார்.

பணிக்கான தாமதம் குறித்து ஒப்பந்ததாரர் கூறுகையில், ஒப்பந்தம் 2010-ம் மேற்கொள்ளப்பட்ட போதிலும் 2011 டிசம்பர் மாதம்தான் ஒப்பந்ததாரரிடம் பணி மேற்கொள்ளப்பட வேண்டிய இடம் ஒப்படைக்கப்பட்டது.

இருப்பினும் சுரங்கப் பாதை அவ்விடத்தை தோண்டும்போது குடிநீர் குழாய்கள் அவ்வழியே சென்றதால், குழாயை அகற்ற வேண்டிய நிலை உருவானதால், நகராட்சியினர் அப்பணியை மேற்கொண்டதால் ஜூலை மாதம் வரை சுரங்கப் பாதை பணியைத் தொடக்க முடியாமல் போனது.

சுரங்கப்பாதைக்காக பள்ளம் தோண்டும்போது கடல் நீர் சுரக்கிற காரணத்தால் பணியில் இடையூறு ஏற்படுவதாகவும் இதையும் சரிசெய்து ஜூலை மாதத்திலிருந்து தற்போது பணி மேற்கொண்டு வருவதாகவும், 24 மீ நீளம் கொண்ட பாதையை மே மாத இறுதிக்குள் முடித்து நெடுஞ்சாலைத் துறையிடம் ஒப்படைக்கத் திட்டமிட்டுள்ளதாகவும், அதன்பின் நெடுஞ்சாலைத் துறையினர் சுரங்கப் பாதையிலிருந்து இணைப்புச் சாலைகளை எவ்வுளவு விரைவில் அமைத்துத் தருகிறார்களோ? அதன்பின்னரே பொதுமக்கள் இச்சாலையை பயன்படுத்த முடியும் என்றார் ஒப்பந்ததாரர்.

இதைத் தொடர்ந்து அழகிரி எம்பி கூறுகையில், "கடலூர் மக்களின் நலன்கருதி நகராட்சி நிர்வாகமும் ஒத்துழைப்புக் கொடுத்தால்தான் பணிகள் விரைவில் முடிந்து செயல்பாட்டுக்கு கொண்டுவர முடியும் என்பதை நகராட்சி கவுன்சிலர்கள் உணர்ந்து செயல்பட்டால் சுரங்கப்பாதையை இப்பகுதி மக்கள் நெருக்கடியிலிருந்து விரைவில் விடுதலை பெறமுடியும்' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.