சிதம்பரம் நகரில் மின்வெட்டுடன், குறைந்த மின்அழுத்தம் சேர்ந்துள்ளதால் பொதுமக்கள், வியாபாரிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
கடந்த சில தினங்களாக காற்றாலை மின்சாரம் அதிகம் கிடைப்பதால் சிதம்பரம் நகரில் இரவு நேரங்களில் மின்வெட்டு செய்யப்படுவது நிறுத்தப்பட்டுள்ளது.
12 மணி நேரம் மின்வெட்டு தற்போது 6 மணி நேரமாக குறைந்துள்ளது. இருப்பினும் கடந்த சில தினங்களாக குறைந்த மின்அழுத்தத்தால் டியூப்லைட்டுகள் எரிவதில்லை. பல இடங்களில் டியூப்லைட் பியூஸ் போய்விடுகிறது. குறைந்த மின்அழுத்தத்தால் மின்விசிறியின் காயில் புகைந்து விடுவதாகக் கூறப்படுகிறது. ஏற்கெனவே மின்வெட்டை அனுபவித்து வரும் சிதம்பரம் நகர மக்களும், வியாபாரிகளும் குறைந்த மின்அழுத்தத்தால் மேலும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
இது குறித்து மின்வாரிய அதிகாரியைத் தொடர்பு கொண்டு கேட்ட போது "காற்றாலை மின்சாரம் தற்போது வழங்கப்படுவதால் குறைந்த மின்அழுத்தம் ஏற்பட்டுள்ளதாகவும், விரைவில் சீரமைக்கப்படும்' என தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வைகாசி விசாகம்: சிறப்பு அஞ்சல் முத்திரைகள் வெளியீடு

தமிழகத்தில் 250 புதிய துணை மின் நிலையங்கள் தேவை

யானை தாக்கி இருவா் உயிரிழப்பு

காட்டெருமையைக் கண்டு ஓடிய யானை
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India


