92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

படகுச் சவாரிக்கு அழைக்கிறது பிச்சாவரம்!

கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம் அருகே கடலோரத்தில் அமைந்துள்ளது பிச்சாவரத்தின் மாங்குரோவ் (சுரபுண்ணை) காடுகளும், படகு குழாமும் ஏராளமான சுற்றுலாப் பயணிகளை ஈர்த்து வருகின்றன.

News image
Updated On :20 ஜனவரி 2015, 10:40 am

ஜி.சுந்தரராஜன்

கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம் அருகே கடலோரத்தில் அமைந்துள்ளது பிச்சாவரத்தின் மாங்குரோவ் (சுரபுண்ணை) காடுகளும், படகு குழாமும் ஏராளமான சுற்றுலாப் பயணிகளை ஈர்த்து வருகின்றன.

சிதம்பரத்திலிருந்து 16 கி.மீ. தொலைவில் உள்ளது பிச்சாவரம் வனப்பகுதி. சென்னை, புதுவை, கடலூர் மார்க்கமாக வாகனங்களில் வரும் சுற்றுலாப் பயணிகள் சிதம்பரம் நகருக்கு முன்பாகவே, பி.முட்லூர் அருகே பிரியும் சாலை வழியாக பிச்சாவரம் செல்லலாம்.

பிச்சாவரத்தின் கடற்கரை நீளம் 6 கி.மீ. ஆகும். மேற்கே உப்பனாறும், தெற்கே கீழத்திருக்கழிப்பாலை கிராமமும், வடக்கே சுரபுண்ணை காடுகளும் அதன் எல்லைகளாக உள்ளன. பிச்சாவரம் சதுப்பு நிலக்காடுகள் 3 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் உள்ளது. இக்காடுகளில் உப்பங்கழிகளும், அடர்த்தியான மாங்குரோவ் செடிகளும் உள்ளன. கடலோரத்தில் உப்பனாற்றில் உள்ள இக்காடுகளில் சுமார் 4,400 கால்வாய்கள் உள்ளன. இக்காடுகளை வனத் துறையினர் பாதுகாத்து வருகின்றனர். இந்த மாங்குரோவ் காடுகள் மற்றும் கால்வாய்களை படகு மூலம் சென்று பார்க்கலாம்.

வெளிநாட்டுப் பறவைகள்: ஆண்டு தோறும் மார்ச், ஏப்ரல், மே ஆகிய 3 மாதங்கள் இப்பகுதிக்கு வெளிநாட்டுப் பறவைகள் கூட்டம், கூட்டமாக வரும். மேலும் கடற்கரையோரம் எம்ஜிஆர் திட்டு, சின்னவாய்க்கால், பில்லுமேடு ஆகிய 3 எழில்மிகு தீவுகள் உள்ளன. மேற்கண்ட தீவுகளில் மீனவர்கள் வசித்து வந்தனர்.

எம்ஜிஆர் திட்டு: எம்ஜிஆர் நடித்த

இதயக்கனி படப்பிடிப்பு பிச்சாவரத்தில் நடைபெற்றதால் அங்குள்ள தீவுக்கு எம்ஜிஆர் திட்டு என பெயர் சூட்டப்பட்டது.

படகுச் சவாரி: பிச்சாவரத்தில் உள்ள அறிஞர் அண்ணா சுற்றுலா வளாகத்தில் படகுக் குழாமை தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் நடத்தி வருகிறது. படகுக் குழாமில் துடுப்பு படகில் சவாரி செய்ய ஒரு மணி நேரத்துக்கு ஒரு நபருக்கு ரூ.40 வீதம், 5 பேர் பயணம் செய்ய ரூ.200 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

மோட்டார் படகில் இரண்டு மணி நேரத்துக்கு 8 பேர் பயணம் செய்ய ரூ.2,100 வசூலிக்கப்படுகிறது. காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரைதான் படகுச் சவாரிக்கு அனுமதியளிக்கப்படுகிறது.

உயர்கோபுரம்: ஒரே இடத்திலிருந்து பிச்சாவரம் சுற்றுலா வனப்பகுதியை பார்க்கும் வண்ணம் உயர்கோபுரமும் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் விபரங்களுக்கு: அறிஞர் அண்ணா சுற்றுலா வளாக மேலாளர் உதயகுமார் தொலைபேசி எண்: 04144-249249. சிதம்பரத்தில் உள்ள தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழக அலுவலக தொலைபேசி எண்: 04144-238739. கிள்ளை பேரூராட்சி தொலைபேசி எண்: 04144-249227, 249557. வெப்சைட் முகவரி: ஜ்ஜ்ஜ்.ந்ண்ப்ப்ஹண்.ஸ்ரீர்ம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.