சிதம்பரத்தில் நவராத்திரி கொலு அலங்காரப் போட்டிகள்!
சிதம்பரத்தில் 21-வது ஆண்டு நவராத்திரி கொலு அலங்காரப் போட்டிகளின் பரிசளிப்பு விழா ஹோட்டல் சாரதாராமில் புதன்கிழமை நடைபெற்றது.


சிதம்பரத்தில் 21-வது ஆண்டு நவராத்திரி கொலு அலங்காரப் போட்டிகளின் பரிசளிப்பு விழா ஹோட்டல் சாரதாராமில் புதன்கிழமை நடைபெற்றது.
சிதம்பரத்தில் உள்ள வீடுகளில் வைக்கப்பட்டு கொலு அலங்காரங்களை தேர்வுக்குழு உறுப்பினர்கள் கமலா செந்தில்நாதன், சாருமதி மோகன், ஆனந்தி சுவேதகுமார் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு கொலு பொம்மைகளின் வகைகளையும், கலை அமைப்பினையும், அலங்காரங்களையும் மதிப்பிட்டு வெற்றியாளர்களை தேர்வு செய்தனர். மேலும் வீட்டில் உள்ள குழந்தைகள் மாறுவேடம் அணிந்திருந்தால், அதற்கு சிறப்பு பரிசுகளும் வழங்கப்பட்டது.
இப்போட்டியில் சிதம்பரம் காசிமடத்தெருவைச் சேர்ந்த அனுஷா முதல் இடத்தை பெற்று பிலிப்ஸ் ஹோம் தியேட்டர் பரிசும், புதுத்தெருவைச் சேர்ந்த கீதா இரண்டாம் இடத்தை பெற்று பிரீத்தி மிக்சி பரிசும், காயத்ரி அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த வித்யா பழனிவேலு மூன்றாமிடத்தை பெற்று எலக்டிர் குக்கர் பரிசும் பெற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு அண்ணாமலைப் பல்கலைக்கழக பேராசிரியை அங்கையற்கன்னி பஞ்சநாதன் பரிசுகளை வழங்கினார். பரிசளிப்பு விழாவில் ஹோட்டல் மேலாளர் ராஜசேகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...