முறைகேடு குற்றச்சாட்டு: பினராயி விஜயன் மீது கேரள லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு இந்திய எல்லை அருகே உள்ள துறைமுக விரிவாக்கத்துக்கு சீனாவுடன் வங்கதேசம் ஒப்பந்தம்குருத்வாரா வளாகத்தில் அரசியல் முழக்கம்: கேஜரிவால் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு மருத்துவமனைகளில் கட்டண விவரங்கள் காட்சிப்படுத்தப்படுவதை உறுதி செய்க: மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் "வதந்தி' பரப்பியதாக 300 சமூக ஊடக பதிவுகளை நீக்க காவல் துறை நடவடிக்கை எஸ்ஐஆா் படிவம் 6: தோ்தல் ஆணையத்தின் திருத்தத்தை அங்கீகரிக்கவில்லை- உச்சநீதிமன்றம்இந்திய கடற்படையில் 3-ஆவது நீா்மூழ்கி எதிா்ப்பு போா்க் கப்பல் சோ்ப்பு- உள்நாட்டிலேயே கட்டப்பட்ட நவீன கப்பல்

பிரதோஷம்: சிவன் கோயில்களில் சிறப்புப் பூஜை

பிரதோஷ விழாவை முன்னிட்டு, மாவட்டத்திலுள்ள பல்வேறு சிவன் கோயில்களில் வெள்ளிக்கிழமை நந்தீஸ்வரருக்கு சிறப்புப் பூஜை, அபிஷேகம் நடைபெற்றது.

Published On :

பிரதோஷ விழாவை முன்னிட்டு, மாவட்டத்திலுள்ள பல்வேறு சிவன் கோயில்களில் வெள்ளிக்கிழமை நந்தீஸ்வரருக்கு சிறப்புப் பூஜை, அபிஷேகம் நடைபெற்றது.

பிரதோஷத்தின் போது ஈஸ்வரன் கோயிலில் உள்ள நந்தி பகவானுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். இதேபோல் வெள்ளிக்கிழமை பிரதோஷம் என்பதால், கடலூர் திருப்பாதிரிபுலியூர் பாடலீசுவரர் கோயிலில் உள்ள நந்தீஸ்வரருக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.

இதைத் தொடர்ந்து, பால், தயிர், தேன், சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட பொருள்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர், பெரியநாயகி சமேத பாடலீசுவரருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். இதேபோல், மாவட்டம் முழுவதுமுள்ள சிவன் கோயில்களில் பிரதோஷ விழா கொண்டாடப்பட்டது.

விருத்தாசலம்: இதேபோல், விருத்தாசலம் பழமலைநாதர் கோயிலில் நுழைவு வாயில் மண்டபத்தில் உள்ள நந்தீஸ்வரருக்கு பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு நந்தீஸ்வரரை வழிபட்டுச் சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.