ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

பேச்சுவார்த்தையில் உடன்பாடு: போராட்ட அறிவிப்பு வாபஸ்

பண்ருட்டியில் மக்கள் பாதுகாப்பு கவசம் அமைப்பினர் அறிவித்த சாலை மறியல் போராட்டம், அதிகாரிகளின் பேச்சுவார்த்தையை அடுத்து வாபஸ் பெறப்பட்டது.

News image
Updated On :21 மார்ச் 2017, 5:38 am

தினமணி

பண்ருட்டியில் மக்கள் பாதுகாப்பு கவசம் அமைப்பினர் அறிவித்த சாலை மறியல் போராட்டம், அதிகாரிகளின் பேச்சுவார்த்தையை அடுத்து வாபஸ் பெறப்பட்டது.
 பண்ருட்டி நகரப் பகுதியில் கழிவுநீர்க் கால்வாய்களை தூர்வார வேண்டும், திறந்து கிடக்கும் கால்வாய்களை சிமென்ட் பலகையைக் கொண்டு மூட வேண்டும், இந்திரா காந்தி சாலை, கும்பகோணம் சாலையில் தேங்கி நிற்கும் கழிவுநீரை அகற்ற வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி மக்கள் பாதுகாப்பு கவசம் அமைப்பு சார்பில் திங்கள்கிழமை சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
 இதுதொடர்பாக, பண்ருட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் விஜய் ஆனந்த் தலைமையில் திங்கள்கிழமை பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது நகராட்சி அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், கும்பகோணம் சாலையில் கழிவுநீர்க் கால்வாய் பராமரிப்புப் பணிக்கு ரூ.8 லட்சம் மதிப்பில் ஒப்பந்தம் விடப்பட்டு விரைவில் பணி தொடங்கவுள்ளது. மேற்படி இடத்தில் உள்ள கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
 இந்திரா காந்தி சாலை உள்ளிட்ட மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள இடங்களில் கால்வாய்கள் காலமுறையாக தூர்வாரப்பட்டு, கழிவுநீர் தேங்காமல் இருக்கவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதனால், சாலை மறியல் போராட்ட அறிவிப்பு வாபஸ் பெறப்பட்டது. பேச்சுவார்த்தையில், நகராட்சி பொறியாளர் வெங்கடாஜலம், உதவிப் பொறியாளர் சிவசங்கரன், மக்கள் பாதுகாப்பு கவசம் அமைப்பின் மாவட்ட அமைப்புக்குழு எம்.வெங்கடேசன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் எஸ்.தஷ்ணாமூர்த்தி, மாவட்ட அமைப்புக்குழு வி.சேதுராஜன், கே.ஆறுமுகம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.