அதிகாரிகளுக்கு கொலை மிரட்டல்: துப்புரவுப் பணியாளர் கைது
பண்ருட்டி நகராட்சி அலுவலகத்தில் புகுந்து அதிகாரி, ஊழியர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக துப்புரவுப் பணியாளரை போலீஸôர் புதன்கிழமை கைது செய்தனர்.


பண்ருட்டி நகராட்சி அலுவலகத்தில் புகுந்து அதிகாரி, ஊழியர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக துப்புரவுப் பணியாளரை போலீஸôர் புதன்கிழமை கைது செய்தனர்.
பண்ருட்டி, சாமியார் தர்கா பின்புறம் வசிப்பவர் குப்புசாமி (47). இவர், பண்ருட்டி நகராட்சியில் துப்புரவுப் பணியாளராகப் பணியாற்றி வருகிறார். செவ்வாய்க்கிழமை காலை 6 மணிக்கு கையொப்பமிட்டு 2-ஆவது வார்டு பகுதியில் துப்புரவுப் பணிக்குச் சென்றாராம்.
இந்த நிலையில், துப்புரவு அலுவலர் டி.சக்திவேல் மேற்கண்ட பகுதியில் ஆய்வு செய்த போது, குப்புசாமி பணியில் இல்லையாம். பின்னர், அலுவலகம் வந்த குப்புசாமி நகராட்சி அதிகாரி, அங்கு வேலை செய்து கொண்டிருந்த பணியாளர்களை அசிங்கமாகத் திட்டி, கொலை மிரட்டல் விடுத்தாராம். இதுகுறித்து துப்புரவு அலுவலர் டி.சக்திவேல் அளித்த புகாரின் பேரில், பண்ருட்டி போலீஸôர் குப்புசாமியை கைது செய்து சிறையிலடைத்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...