அடையாளம் தெரியாத ஆண் சடலம் அடக்கம்

வடலூர் அருகே ஏரியில் அழுகிய நிலையில் கிடந்த அடையாளம் தெரியாத ஆண் சடலத்தைப் பேரூராட்சி நிர்வாகத்தின் உதவியுடன் போலீஸார் புதன்கிழமை அடக்கம் செய்தனர்.
Updated on
1 min read

வடலூர் அருகே ஏரியில் அழுகிய நிலையில் கிடந்த அடையாளம் தெரியாத ஆண் சடலத்தைப் பேரூராட்சி நிர்வாகத்தின் உதவியுடன் போலீஸார் புதன்கிழமை அடக்கம் செய்தனர்.
வடலூர் அடுத்துள்ள கொளக்குடி கிராம ஏரியில் சுமார் 50 வயது மதிக்கத் தக்க ஆண் சடலம் அழுகிய நிலையில் கிடந்ததை அந்த வழியே சென்றவர்கள் கண்டனர். இதுகுறித்து வடலூர் காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்த காவல் ஆய்வாளர் ஏழுமலை ஏரியில் மிதந்து கொண்டிருந்த சடலத்தை குறிஞ்சிப்பாடி தீயணைப்புத் துறையினர் மூலம் மீட்டனர்.
இறந்த நபர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்ற விவரம் தெரியவில்லை.  வடலூர் சபையில் தங்கியிருந்தவராக இருக்கலாம்  என சந்தேகிக்கப்படுகிறது. இருப்பினும், உடல் அழுகிய நிலையில் இருந்ததால், வடலூர் பேரூராட்சி நிர்வாகத்தினர் உதவியுடன் போலீஸர் இறந்தவரின் உடலை அடக்கம் செய்தனர். தொடர்ந்து, இதுகுறித்து வடலூர் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com