சுகாதார ஆய்வாளர்கள் ஆர்ப்பாட்டம்

கடலூரில் சுகாதார ஆய்வாளர்கள் சங்கக் கூட்டமைப்பினர் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Updated on
1 min read

கடலூரில் சுகாதார ஆய்வாளர்கள் சங்கக் கூட்டமைப்பினர் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஒரு சுகாதாரத்   துணை  மையத்துக்கு ஒரு சுகாதார ஆய்வாளர் என்ற விகிதத்தில் பணியிடங்களை உருவாக்கி, பணி நியமனம் செய்ய வேண்டும். பதவி உயர்வு பெற்றவர்களுக்கு அதற்கான பணிகளை மட்டுமே வழங்க வேண்டும். டெங்கு ஒழிப்புக் களப்பணியில் உள்ள பிரச்னைகளை முறைப்படுத்த வேண்டும்.
சுகாதார ஆய்வாளர்களின் களப்பணி நேரத்தை ஒழுங்குப்படுத்த வேண்டும். பணி மாறுதல் கலந்தாய்வை நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் கடலூரில் மாவட்ட ஆட்சியர் பழைய அலுவலகம் எதிரே புதன்கிழமை மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு கூட்டமைப்பின் மாவட்ட அமைப்பாளர் டி.நாட்டுத்துரை தலைமை வகித்தார்.
நிர்வாகிகள் செல்வநாதன், பரிமளம், அருண்குமார், துளசிதாஸ், முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஓய்வு பெற்ற ஊழியர்கள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஆர்.மனோகரன், அரசு ஊழியர்கள் சங்கத்தின் மாவட்ட முன்னாள் செயலர் என்.காசிநாதன், உணவுப் பாதுகாப்புத் துறை சங்கத்தின் மாநிலப் பொருளாளர் டி.ரவிச்சந்திரன், அரசு ஊழியர்கள் சங்கத்தின் வட்டச் செயலர் ஆசைத்தம்பி ஆகியோர் வாழ்த்திப் பேசினர். சுகாதாரத் துறை அலுவலர்கள் சங்கத்தின் மாநிலத் தணிக்கையாளர் எல்.அரிகிருஷ்ணன் நிறைவுறையாற்றினார். கூட்டமைப்பின் பொருளாளர் பிரகாஷ் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com