கடலூரில் பழுதான சாலைகளைச் சீரமைக்கக் கோரி, வாகன ஓட்டிகளுக்கு சுவாச கவசம் அளித்து திமுகவினர் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடலூர் மாவட்டத்தில் அண்மையில் பெய்த பருவ மழையால், கடலூர் நகரில் சாவடி, கம்மியம்பேட்டை, மஞ்சக்குப்பம், முதுநகர் என நகரின் பிரதான சாலைகள் அனைத்தும் பழுதடைந்தன.
குண்டும் குழியுமான இந்தச் சாலைகள் வழியாக வாகனங்கள் செல்லும் போது, தூசிப் படலம் ஏற்பட்டு இருசக்கர வாகனங்கள் செலுத்த முடியாத நிலை ஏற்படுகிறது.
இந்தச் சாலைகளைச் சீரமைக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.
எனினும், உரிய நடவடிக்கை எடுக்கப்படாததைக் கண்டித்தும், சாலைகளை உடனடியாகச் சீரமைக்க வலியுறுத்தியும் கடலூர் நகர் திமுகவின் புதன்கிழமை நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நகர திமுக செயலர் கே.எஸ்.ராஜா தலைமையில் தேர்தல் பணிக் குழுச் செயலர் இள.புகழேந்தி, மாவட்ட அவைத் தலைவர் து.தங்கராசு உள்ளிட்டோர் கம்மியம்பேட்டை கெடிலம் சாலையின் வழியாகச் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு சுவாச கவசம் அணிவித்தனர்.
அப்போது, மாவட்ட நிர்வாகம் உடனடியாக இந்தச் சாலைகளைச் சீரமைத்து, மக்களை காக்கத் தவறினால் அடுத்த கட்டமாக சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும் எனத் தெரிவித்தனர்.
போராட்டத்தில் மாவட்ட திமுக பொருளாளர் வி.எஸ்.எல்.குணசேகரன் உள்பட ஏராளமான திமுகவினர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.