தவெக அமைச்சர்கள் கமிஷன் வாங்குகிறார்கள்; ஆடியோ ஆதாரம் உள்ளது - அண்ணாமலைபாஜகவில் இருந்து விலகினார் நடிகர் தேவன் கர்நாடகத்தில் தமிழர்கள் சுட்டுக்கொலை: மு.க. ஸ்டாலின் கண்டனம்! வந்தே மாதரம் பாடலுக்கு அவமதிப்பு! காங். மன்னிப்பு கேட்க வேண்டும்: சுவேந்து அதிகாரிசென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு!கோவையில் இளைஞர் கொலை: குடும்பத்தினருக்கு ரூ. 6 லட்சம் நிவாரணம், அரசுப் பணிசுதந்திர நாள் அணிவகுப்புப் பணியின்போது காவலர் பலி: ரூ. 30 லட்சம் நிதியுதவி!பெண்களை இழிவுபடுத்தும் வகையில் நயினாரின் பேச்சு: சிபிஎம் கண்டனம்!
/

எரிவாயு உருளைகள் வெடித்ததில் 6 பேர் காயம்

பெண்ணாடத்தில் 2 எரிவாயு உருளைகள் வெடித்ததில் 6 பேர் செவ்வாய்க்கிழமை காயமடைந்தனர்.

Updated On :30 ஜனவரி 2024, 11:25 pm IST

பெண்ணாடத்தில் 2 எரிவாயு உருளைகள் வெடித்ததில் 6 பேர் செவ்வாய்க்கிழமை காயமடைந்தனர்.
பெண்ணாடம் புத்தர் தெருவைச் சேர்ந்தவர் பெ.ரவி (50). சமையல் பாத்திரங்கள் வாடகைக்கு விடும் கடை நடத்தி வருகிறார். கடையின் மற்றொரு பகுதியில் இவரது வீடு உள்ளது. செவ்வாய்க்கிழமை காலை ரவியும், அவரது மனைவி சரோஜாவும் (49) வழக்கம்போல கடைக்குச் சென்றனர். பின்னர் தங்களது வீட்டுக்கு திரும்பினர். இந்த நிலையில் கடையில் தீப்பிடித்து புகை வெளியாகியுள்ளது. இதுகுறித்து அந்தப் பகுதியினர் ரவிக்கு தகவல் அளித்துவிட்டு, தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். 
அப்போது, திடீரென கடையில் வைக்கப்பட்டிருந்த 2 எரிவாயு உருளைகள் ஒன்றன் பின் ஒன்றாக வெடித்தன. இதில் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்த அதே பகுதியைச் சேர்ந்த மாயவன் மகன் அசோக்குமார் (27), கலியபெருமாள் மகன் பரமசிவம் (25), நடராஜன் மகன் பழனிவேல் (27), ராமலிங்கம் மகன் சிவபாலன் (35), காதர் பாஷா மகன் சம்சுதீன் (40) மற்றும் ரவி (50) ஆகியோர் பலத்த காயமடைந்தனர்.
உடனடியாக 6 பேரையும் அந்தப் பகுதியினர் மீட்டு பெண்ணாடம் அரசு ஆரம்ப சுகாதரா நிலையத்தில் முதலுதவி சிகிச்சைக்குப்பின் தீவிர சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதுகுறித்து தகவலறிந்த திட்டக்குடி தீயணைப்பு நிலைய வீரர்கள், நிலைய அலுவலர் சண்முகம் தலைமையில் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.
சம்பவம் குறித்து பெண்ணாடம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர். முதல்கட்ட விசாரணையில், கடையின் மற்றொரு பகுதியில் வசித்து வரும் ரவி தம்பதியர் சுடுதண்ணீர் போடுவதற்காக எரிவாயு அடுப்பை பற்ற வைத்தனர். 
பின்னர் அதை மறந்து விட்டு அருகே உள்ள மற்றொரு வீட்டுக்குச் சென்றுவிட்டனராம். அதன் காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.