பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கடலூரில் உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக் குழுவினர் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பெண் தொழிலாளர்களுக்கு 8 மணி நேர வேலையை அமலாக்க வேண்டும். ஆண்,பெண் பாகுபாடு இல்லாமல் சமவேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும்.
அனைத்து முறைசாரா பெண் தொழிலாளர்களுக்கும் 6 மாதம் மகப்பேறு நிவாரணம் வழங்க வேண்டும்.
இரவு நேரங்களில் பணிபுரியும் பெண்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்.
பணியிடங்களில் பெண் தொழிலாளர்களுக்கு தனி ஓய்வறை, கழிப்பறை வசதி செய்துத்தர வேண்டும். உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி புகார் கமிட்டி அமைக்க வேண்டும். அனைத்து நகரங்களிலும் பெண்களுக்கு தனிப் பேருந்து வசதி செய்துதர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கடலூரில் உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக்குழு சார்பில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு, இணை ஒருங்கிணைப்பாளர் கே.சாவித்திரி தலைமை வகிக்க, இணை ஒருங்கிணைப்பாளர் எஸ்.சாந்தகுமாரி முன்னிலை வகித்தார்.
பெண்கள் கூட்டமைப்பு சார்பில் எஸ்.ஜெயஸ்ரீ, சிஐடியூ மாநிலக்குழு உறுப்பினர் வி.கிருஷ்ணமூர்த்தி, உழைக்கும் பெண்கள் குழு எம்.சூரியகலா, எம்.மனோரஞ்சிதம், பொது தொழிலாளர் சங்கம் வி.ரேனுகா, தையல் சங்கம் டி.லதா உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஈரானுக்கு ரூ. 3,000 கோடி வழங்குவதாக பரவும் செய்தி பொய்! டிரம்ப்

உணவை சூடாக்கிச் சாப்பிடலாமா? குடல் தொற்றுக்கும் ஃபுட் பாய்சனுக்கும் வித்தியாசம் என்ன?
மக்களின் பாதுகாப்பு பிரச்னைகளுக்கு 'கால்ஷீட்' எப்போது? மு.க. ஸ்டாலின் கேள்வி!






