பண்ருட்டி பேருந்து நிலையத்தில் ஆங்காங்கே ஏற்பட்டுள்ள பெரிய பள்ளங்களால் பயணிகள் அவதிப்படுகின்றனர்.
பண்ருட்டி பேருந்து நிலையத்துக்கு அரசு, தனியார் பேருந்துகள் நாள்தோறும் 1,500 நடைக்கு மேல் வந்து செல்கின்றன. ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றன. பயணிகள், பேருந்துகளின் வருகை அதிகரித்ததைத் தொடர்ந்து, பண்ருட்டி நகராட்சி நிர்வாகம் சார்பில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் பேருந்து நிலையத்தின் மேற்கு, தெற்கு பகுதிகளில் இருந்த கட்டங்கள் இடிக்கப்பட்டு விரிவாக்கம் செய்யப்பட்டது.
பேருந்து நிலையத்தில் ஏற்கெனவே சிமென்ட் தரைத் தளம் அமைக்கப்பட்டிருந்த நிலையில், விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதியில் மட்டும் தார் தரைத் தளம் அமைக்கப்பட்டது. தற்போது, தார் தரை தளம் பகுதி ஆங்காங்கே சேதமடைந்து பெரிய பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. இதனால், பேருந்து ஓட்டுநர்கள், பயணிகள் சிரமப்படுகின்றனர். பேருந்துகளை பிடிக்க அவசரமாக செல்லும் பயணிகள் பள்ளத்தை கவனிக்காமல் அதில் திடீரென காலை வைத்து கீழே விழுந்து பாதிக்கப்படுகின்றனர். இதனால் விபத்து அபாயம் தொடர்கிறது.
இதுகுறித்து பயணிகள் கூறியதாவது: பண்ருட்டி பேருந்து நிலையத்தில் பெரிய அளவிலான பள்ளங்கள் 3 இடங்களில் உள்ளன. பள்ளங்களில் தேங்கியுள்ள அசுத்த நீரால் சுகாதாரச் சீர்கேடு ஏற்படுகிறது. பேருந்து நிலையத்தில் உள்ள உயர் கோபுர மின் விளக்கு சரியாக எரிவதில்லை. மேலும், பயணிகளுக்கு இடையூறாக மாடுகள், நாய்கள் அதிகளவில் சுற்றித் திரிகின்றன. இந்தப் பிரச்னைகள் குறித்து நகராட்சி நிர்வாகத்தினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
இன்றைய செய்திகள் ஜூன் 24 - நேரலை!

தவெகவில் இணையும் விஜயபாஸ்கர்? அமைச்சர் ஆனந்த் உடன் சந்திப்பு
தாயாவதை உறுதி செய்தார் சமந்தா! மகப்பேறு விடுமுறை எடுப்பதாகப் பேச்சு!

வைப்புத்தொகைக்கான வட்டி விகிதத்தை அதிகரித்த பந்தன் வங்கி!
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!


