மகா சிவராத்திரி: சரக்கொன்றைநாதருக்கு பக்தர்கள் அபிஷேகம் செய்ய ஏற்பாடு
மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு, பண்ருட்டி திருவதிகை ஸ்ரீ வீரட்டானேஸ்வரர் கோயிலில் அமைந்துள்ள சரக்கொன்றைநாதருக்கு பக்தர்கள் பஞ்ச நதி தீர்த்தங்களைக் கொண்டு அபிஷேகம் செய்ய ஏற்பாடு


மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு, பண்ருட்டி திருவதிகை ஸ்ரீ வீரட்டானேஸ்வரர் கோயிலில் அமைந்துள்ள சரக்கொன்றைநாதருக்கு பக்தர்கள் பஞ்ச நதி தீர்த்தங்களைக் கொண்டு அபிஷேகம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பண்ருட்டி திருவதிகையில் பெரியநாயகி உடனுறை வீரட்டானேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. புகழ் பெற்ற இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் மகா சிவராத்திரி விழா சிறப்பாகக் கொண்டாடப்படும்.
அந்த வகையில், நிகழாண்டுக்கான சிவராத்திரி விழா செவ்வாய்க்கிழமை (பிப். 13) நடைபெறுவதையொட்டி, இந்து சமுதாய ஆன்மிக அறக்கட்டளை சார்பில், பண்ருட்டி திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோயிலில் 11-ஆம் ஆண்டு மகா சிவராத்திரி விழாவுக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. மகாசிவராத்திரி அன்று கோயில் வளாகத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சரக்கொன்றைநாதருக்கு பக்தர்களே தங்களது கைகளால் கங்கை உள்ளிட்ட பஞ்ச நதி தீர்த்தங்களைக் கொண்டு செவ்வாய்க்கிழமை காலை 6 மணி முதல் புதன்கிழமை காலை 6 மணி வரை அபிஷேகம் செய்யலாம் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...