கடலூர் அருகே கூலி நிலுவையைக் கேட்ட கொத்தனாரை கத்தியால் குத்திதாக தச்சர் ஒருவரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
கடலூர் அருகே உள்ள காரைக்காடு அங்காளம்மன் கோயில் தெருவில் வசிப்பவர் சாரங்கன் (45). கொத்தனார். சின்ன காரைக்காடு முருகன் கோயில் தெருவில் வசிப்பவர் பன்னீர்செல்வம் (37). தச்சர். கடந்த 10 தினங்களுக்கு முன்பு பன்னீர்செல்வம் தச்சு வேலை செய்து வந்த இடத்தில், கட்டுமான வேலை செய்ய கொத்தனார் சாரங்கனை அழைத்துச் சென்றாராம். பணி செய்த வகையில், சாரங்கனுக்கு சேர வேண்டிய கூலி நிலுவை ரூ. 300-ஐ பலமுறை கேட்டும் பன்னீர்செல்வம் தரவில்லையாம். இந்த நிலையில், சனிக்கிழமை சாரங்கன், பன்னீர்செல்வத்தின் வீட்டுக்குச் சென்று கூலி நிலுவையைக் கேட்டுள்ளார்.
அப்போது, இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில், பன்னீர்செல்வம் இரும்புக் கத்தியால் சாரங்கனை குத்திக் காயப்படுத்தினாராம்.
இதுகுறித்து சாரங்கன் அளித்த புகாரின் பேரில், கடலூர் முதுநகர் போலீஸார் வழக்குப் பதிந்து பன்னீர்செல்வத்தை கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தவறாமல் வாக்களிப்போம்

மகிழ்ச்சி இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

லெபனான்-இஸ்ரேல் அமைதிப் பேச்சு: உடன்பாட்டுக்குக் கட்டுப்பட மாட்டோம் - ஹிஸ்புல்லா திட்டவட்டம்

சமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்பு
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை

