மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

நரிக்குறவர் சமூகத்தினருக்கு குடியிருப்பு அமைத்துத் தர கோரிக்கை

நரிக்குறவர் சமூகத்தினருக்கு குடியிருப்பு அமைத்துத் தர வேண்டும் என தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கம் கோரிக்கை விடுத்தது. 

Updated On :23 ஜூலை 2018, 9:20 am IST

நரிக்குறவர் சமூகத்தினருக்கு குடியிருப்பு அமைத்துத் தர வேண்டும் என தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கம் கோரிக்கை விடுத்தது. 
இதுகுறித்து அந்தச் சங்கத்தின் மாவட்டச் செயலர் ஆர்.மனோகரன் கடலூர் மாவட்ட ஆட்சியருக்கு அண்மையில் அனுப்பியுள்ள கோரிக்கை மனு: மாவட்டத் தலைநகரான கடலூர் திருப்பாதிரிபுலியூர் ரயில் நிலைய பகுதியில் சுமார் 10 நரிக்குறவர் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அதேபோல, முன்னாள் படை
வீரர் மாளிகை அருகே உள்ள கெடிலம் ஆற்றில் தடுப்புகள் அமைத்து சுமார் 10 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
வறுமைக் கோட்டுக்குக் கீழுள்ள இவர்களது நிலையை மேம்படுத்த மத்திய-மாநில அரசுகள் பல்வேறுத் திட்டங்களை செயல்படுத்தி வரும் நிலையிலும் கடலூர் மாவட்டத்தில் இவர்களின் நிலை மோசமாகவே உள்ளது. எனவே, இவர்களின் நிலையை மேம்படுத்திட மாவட்ட ஆட்சியர் உரிய 
நடவடிக்கை எடுத்து நிரந்தர குடியிருப்பு அமைத்துத் தர வேண்டும் என்று அந்த மனுவில் வலியுறுத்தி உள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.