பள்ளி மாணவர்களுக்கு சுற்றுச்சூழல் விழிப்புணர்வுப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை, பள்ளிக் கல்வித் துறை, கடலூர் கல்வி மாவட்ட தேசிய பசுமைப் படை, ஆரோவில் தாவரவியல் பூங்கா சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சுற்றுச்சூழல் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதற்காக கடலூர் கல்வி மாவட்டத்தில் தேசிய பசுமைப் படை செயல்பட்டு வரும் 20 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. பசுமைப் படையைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் சுற்றுச்சூழல் பயிற்சிக்காக ஆரோவில்லில் உள்ள தாவரவியல் பூங்காவுக்கு களப் பயணம் அழைத்துச் செல்லப்பட்டு பயிற்சியளிக்கப்படுகிறது.
களப்பயணத்தின் போது தாவரவியல் பூங்காவில் வழங்கிய மரக்கன்றுகளை நடும் நிகழ்ச்சி கடலூரில் உள்ள புனித அன்னாள் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் அண்மையில் நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் லிட்டில்ப்ளார், ஆசிரியர்கள் பிந்து, ரோசி, தேசிய பசுமைப் படை ஒருங்கிணைப்பாளர் ப.செல்வநாதன் ஆகியோர் மரக்கன்றுகளை நட்டனர் (படம்).
பசுமைப் படை ஆசிரியர்கள் ஜோஸ்பின் ஷீலா, கலைஞானச்செல்வி, இன்சாட் அறிவியல் சங்கச் செயலர் எஸ்.செல்வகுமாரி ஆகியோர் பங்கேற்றனர். வரும் ஆகஸ்ட் மாதம் 10-ஆம் தேதி வரை தேர்ந்தெடுக்கப்பட்ட 20 பள்ளிகளிலும் களப்பயணம் மேற்கொள்ளுதல் மற்றும் மரக்கன்றுகள் நடும் பணிகள் தொடர்ந்து நடைபெறுமென தெரிவிக்கப்பட்டது.
இதற்கான ஏற்பாடுகளை தாவரவியல் பூங்கா சுற்றுச்சூழல் கல்வி ஆசிரியர் என்.சத்யமூர்த்தி செய்து வருகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்!

அமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு

பார்வையாளர்களைப் பரிசோதிக்கும் அனந்தன் காடு: திரைவிமர்சனம்

எ.வ. வேலு வீடு, அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!


